Asha cover

Movie: Asha (1985)
Music: K. V. Mahadevan
Lyricists: Vaali
Singers: Vani Jayram

Added Date: Feb 11, 2022

பெண்: மௌனம் கலையாதோ சுவாமி மௌனம் கலையாதோ சுவாமி இது மழையை எதிர்ப்பார்த்து மயங்கும் உடல் வேர்த்து தணலாய் கொதிக்கின்ற பூமி..ஈ…

பெண்: மௌனம் கலையாதோ சுவாமி இது மழையை எதிர்ப்பார்த்து மயங்கும் உடல் வேர்த்து தணலாய் கொதிக்கின்ற பூமி..ஈ…

பெண்: மௌனம் கலையாதோ சுவாமி

பெண்: இதழோரம் நகையாட இமையோரம் விழியாட இளவேனிற் நிலவாடவே கனி தாங்கும் கொடியாட பனி தூங்கும் மலராட கலை மானும் இணையாடவே

பெண்: இதழோரம் நகையாட இமையோரம் விழியாட இளவேனிற் நிலவாடவே கனி தாங்கும் கொடியாட பனி தூங்கும் மலராட கலை மானும் இணையாடவே

பெண்: நிழல் மேகமும் கூந்தலில் ஆடி வர மணிமேகலை நூலிடை மூடி வர இந்த மேனகை மேனியும் கோடி பெற நவ மாமுனி சந்நிதி தேடி வர திருவாய் மலர்ந்திட வேண்டும்…ம்ம்ம்ம்..

பெண்: மௌனம் கலையாதோ சுவாமி இது மழையை எதிர்ப்பார்த்து மயங்கும் உடல் வேர்த்து தணலாய் கொதிக்கின்ற பூமி..ஈ…

பெண்: வசந்த காலங்கள் இதுபோல் வாசல் தேடி வருமோ நெஞ்சில் விளைந்த ஞானங்கள் எனைப் போல் ராஜபோகம் தருமோ

பெண்: எழுந்து வாருங்கள் சுகங்கள் மேலும் மேலும் மலர கண்ணை திறந்து பாருங்கள் எதிரில் தேவதேவி உலவ

பெண்: கல்லும் கனியாகும் முள்ளும் மலராகும் கன்னி மயிலாடும் வேளையில் உள்ளம் உருகாதோ வெள்ளம் பெருகாதோ ஒட்டி உறவாடும் லீலையில்

பெண்: தவத்தை கலைக்க வந்த தேவதை தழுவி பொழிய வந்த தேன் மழை உலகை மயக்கும் வண்ணப்பூனகை உதட்டில் எடுத்து வந்த மேனகை..மேனகை…மேனகை..