Asha cover

Movie: Asha (1985)
Music: K. V. Mahadevan
Lyricists: Vaali
Singers: Vani Jayram

Added Date: Feb 11, 2022

பெண்: வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன் வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன் இந்த வீணையில் உனக்கென ஸ்ருதி சேர்த்தேன்

பெண்: வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்.. இந்த வீணையில் உனக்கென ஸ்ருதி சேர்த்தேன்

பெண்: வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்..

பெண்: மீட்டாதிருந்த வீணை இது மீட்டாதிருந்த வீணை இது இன்று மீட்டுகிறேன் தெய்வ ஆணை இது…

பெண்: வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்..

பெண்: வாழ வந்தேன் இந்த வாசலை தேடி மாலையுடன் திருமாங்கல்யம் சூடி நானிருந்தேன் நல்ல நாயகன் கூட நீ நினைத்தாய் ஒரு நாடகம் ஆட நினைத்தது போலே நடத்திய பாவி நீதான் நீதான் தெரிந்ததய்யா

பெண்: வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்…

பெண்: யாரறிவார் அன்று நான் பட்ட பாடு வேரினிலே சுடு நீர் விட்டபோது கூடு விட்டு அன்று போனது ஆவி போன பின்னால் இனி நானொரு தேவி இருட்டினில் வாழும் தருமங்கள் யாவும் வெளிச்சம் காணும் வேளையிது

பெண்: மண்ணில் பிறந்து விண்ணில் பறந்து கண்ணில் படாமல் இருந்தேன் தொட்டும் தொடாமல் பட்டும் படாமல் விட்டும் விடாமல் தொடர்ந்தேன்

பெண்: ஒவ்வொரு நாழியும் துடித்தேன் உறக்கம் இல்லாமல் தவித்தேன் ஒவ்வொரு நாழியும் துடித்தேன் உறக்கம் இல்லாமல் தவித்தேன்

பெண்: பாண்டியன் சபையில் நீதியை கேட்ட பத்தினி தெய்வம் கண்ணகி நான் காலம் இதுதான் நேரம் இதுதான்

பெண்: வா வா தலைவா நீ வா… வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்..