Asha cover

Movie: Asha (1985)
Music: K. V. Mahadevan
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayram

Added Date: Feb 11, 2022

ஆண்: கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான் கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான் முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான்

ஆண்: கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான் கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான் முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான்

பெண்: ராகத்தில் நானென்ன மோகனமா நடு ராத்திரி பாடுற கீர்த்தனமா ராகத்தில் நானென்ன மோகனமா நடு ராத்திரி பாடுற கீர்த்தனமா

பெண்: தேகத்தில் தாளங்கள் பிறந்திடுமா ஸ்ருதி சேர்த்திட நானென்ன மிருதங்கமா
ஆண்: ம்ஹீம்ம்
பெண்: தேகத்தில் தாளங்கள் பிறந்திடுமா ஸ்ருதி சேர்த்திட நானென்ன மிருதங்கமா

பெண்: ஒன்றல்ல ரெண்டல்ல என்னென்று நான் சொல்ல உன்னாசை என்னாசை ஓராயிரம்…. ஒன்றல்ல ரெண்டல்ல என்னென்று நான் சொல்ல உன்னாசை என்னாசை ஓராயிரம்….

பெண்: கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான்
ஆண்: ஹ்ம்ம்..
பெண்: கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான்
ஆண்: ஹ்ம்ம்..
பெண்: முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான்

ஆண்: ஆரம்பமாகட்டும் சங்கமமே என் மார்பினில் சேரட்டும் குங்குமமே ஆரம்பமாகட்டும் சங்கமமே என் மார்பினில் சேரட்டும் குங்குமமே

ஆண்: ஆயிரம் இரவுகள் மடி மேலே வந்து ஆடடி நீ ஒரு கொடி போலே ஆயிரம் இரவுகள் மடி மேலே வந்து ஆடடி நீ ஒரு கொடி போலே

பெண்: மென்மேலும் நீ கொஞ்ச முடியாமல் நான் கெஞ்ச என் பாடு அம்மாடி என்னாவதோ…
ஆண்: ஹஹாஹ்
பெண்: மென்மேலும் நீ கொஞ்ச முடியாமல் நான் கெஞ்ச என் பாடு அம்மாடி என்னாவதோ…

ஆண்: கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான்
பெண்: அஹ…கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான்
ஆண்: முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட
பெண்: இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான்

ஆண்: லால லால்லா லா
பெண்: லால லால்லா லா
ஆண்: லால்லா லால்லா
பெண்: லால்லா லால்லா இருவர்: லால்லா லாலல லால்…. லால்லா லாலல லால்…. லால்லா லாலல லால்….