Maehaveli Song Lyrics

Movie: WWW (2021)
Music: Simon K. King
Lyricists: Madhan Karky
Singers: Sid Sriram and Kalyani Nair

Added Date: Feb 11, 2022

ஆண்: மேகவெளி யாவும் யாவும் உந்தன் பெயரை துளிகளென தூறுதடீ காதல் ஒலி பாயும் பாயும் குறுந்திரை என் உலகம் என மாறுதடீ

பெண்: அருகே நீ நின்றும் உன்னை தீண்டேனா கணினி திரை சிறையை தாண்டேனா

ஆண்: இணையம் வழியே பொழியும் மழையே எங்கும் உந்தன் காணொலியே அலையின் ஒலியாய் இலையின் மொழியாய் காதொலி கருவியில் பேசிடு காதலியே

பெண்: மேகவெளி யாவும் யாவும் உந்தன் பெயரை துளிகளென தூறுதடா
ஆண்: காதல் ஒலி பாயும் பாயும் குறுந்திரை என் உலகம் என மாறுதடீ

ஆண்: எந்தன் அலுவல் எல்லாமே ஏன் இனிக்கிறதோ எந்தன் விசைப்பலகை மேலே பூ மலர்கிறதோ

ஆண்: மின்சுவறொன்று நாம் முன்னே நீ இங்கே நான் அங்கே விண்ணில் மின்னிடும் மீன் எல்லாம் எண்ணி பார்த்தே தீர்த்தாலும் எண்ணிமனான்ணய முத்தங்கள் தீர்ந்தே போகுதே ஓ..

பெண்: மேகவெளி யாவும் யாவும் உந்தன் பெயரை துளிகளென தூறுதடா
ஆண்: காதல் ஒலி பாயும் பாயும் குறுந்திரை என் உலகம் என மாறுதடீ

குழு: …………

ஆண்: நெடுந்தொலை வேணும் போதும் நிலவொளி நிஜமே தொலை தொடர்பபேணும் போதும் வரும் குரல் வரமே

ஆண்: ஏற்பாயா நீ மாட்டாயா நேற்றெல்லாம் அச்சத்தில் ஏற்றுகொண்ட பின்னாலே விண்ணை தாண்டி உச்சத்தில் நரகமும் இன்பம் உன்னோடு நான் வாழும் பட்சத்தில் ஓ…

பெண்: மேகவெளி யாவும் யாவும் உந்தன் பெயரை துளிகளென தூறுதடா
ஆண்: ஏஹ்ஹ்..காதல் ஒலி பாயும் பாயும் குறுந்திரை என் உலகம் என மாறுதடீ