Deivame Thunai cover

Movie: Deivame Thunai (1959)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: A. Maruthakasi
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: மானமே பிரதானம் மானமே பிரதானம் இதை நாம் மதித்து வாழ வேண்டும் தன் மானமே பிரதானம் இதை நாம் மதித்து வாழ வேண்டும் தன் மானமே பிரதானம் வாழ்வு வரினும் தாழ்வு வரினும் வாழ்வு வரினும் தாழ்வு வரினும் வையகத்தில் மாசில்லாத.. மானமே பிரதானம்

ஆண்: மாடும் கன்றும் இருந்தாலும் மக்கள் சுற்றும் நிறைந்தாலும் கோடி செல்வம் குவிந்தாலும் பட்டம் பதவியில் சிறந்தாலும் இருந்தும் இல்லாதவரே மானம் இழந்த பேர்கள் பதரே அதனால் மானமே பிரதானம்

ஆண்: செல்வம் என்றும் நில்லாது அது திரும்பப் பலநாள் செல்லாது செல்வம் என்றும் நில்லாது அது திரும்பப் பலநாள் செல்லாது.. சென்ற மானம் திரும்பாது கண்கண்ட உண்மை இது தவறாது.. மானமே பிரதானம்..

ஆண்: மானம் இழந்தால் அவமானம்…ம்ம். ஆஅ..ஆ…அ..ஆஅ…ஆஅ…ஆ…ஆ… மானம் இழந்தால் அவமானம்…ம்ம். மனிதன் காணும் வெகுமானம் இதை மனதில் கொண்டு நிமிர்ந்து நின்று இதை மனதில் கொண்டு நிமிர்ந்து நின்று புகழைத் தேட வேணும் உலகில் மானமே பிரதானம்..

ஆண்: இதை நாம் மதித்து வாழ வேண்டும் தன் மானமே பிரதானம்

ஆண்: மானமே பிரதானம்.. தன் மானமே பிரதானம்..