Deivame Thunai cover

Movie: Deivame Thunai (1959)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Ka. Mu. Sheriff
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ…ஆஅ…ஆ..ஆ… ஆஅ…ஆஅ…ஹா…ஹா..ஆ..ஆ…ஆ…

பெண்: மலராத மலரெல்லாம் மலரவே மலராத மலரெல்லாம் மலரவே மகிழாத மனமெல்லாம் மகிழவே.ஏ..ஏ.. நிலவோடு தாரகையும் வாழ்த்தவே நிலவோடு தாரகையும் வாழ்த்தவே நித்திலம் போல் வந்துதித்தாய் மைந்தனே நித்திலம் போல் வந்துதித்தாய் மைந்தனே

பெண்: மலராத மலரெல்லாம் மலரவே

ஆண்: கனியூறும் பாலன் முகம் போலவே காணுகின்ற வெண்ணிலவே உன்னையே காணுகின்ற வெண்ணிலவே உன்னையே இனிதாக ஒன்று கேட்பேன் கூறுவாய் இவனைப் போல மழலைப் பேசத் தெரியுமா.ஆ… இவனைப் போல மழலைப் பேசத் தெரியுமா.ஆ…

இருவர்: மலராத மலரெல்லாம் மலரவே

பெண்: இன்ப மணம் வீசுகின்ற தென்றலே..ஏ.. இன்ப மணம் வீசுகின்ற தென்றலே.ஏ.. எழிலோடு பூத்திருக்கும் மலர்களே… எழிலோடு பூத்திருக்கும் மலர்களே… அன்பான தந்தை இவர் போலவே அகிலத்தில் வேறு எங்கும் உண்டுமா…ஆ…

இருவர்: மலராத மலரெல்லாம் மலரவே

பெண்: அன்னை போல அன்பு கொண்ட நாயகி ஆஅ…ஆ…ஆ..ஆ..ஆ..அ.ஆ… அன்னை போல அன்பு கொண்ட நாயகி அடியாள் போல் பணி புரியும் பெண்மணி உன்னைப் போல வையகத்தில் உண்டுமா.ஆ.. என்னைப் போல பாக்யசாலி யாரம்மா…

இருவர்: மலராத மலரெல்லாம் மலரவே