Deivame Thunai cover

Movie: Deivame Thunai (1959)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: A. Maruthakasi
Singers: P. Leela

Added Date: Feb 11, 2022

பெண்: சின்னக் குட்டி நடையப் பாரு சித்தெறும்பாட்டம் இந்த சின்னக் குட்டி நடையப் பாரு சித்தெறும்பாட்டம்

பெண்: நான் கண்ணை வெட்டி கழுத்தையாட்டி கையை நீட்டி மருந்து வித்தா கூடுற கூட்டம் எதேஷ்டம் கூடுற கூட்டம்…

பெண்: சின்னக் குட்டி நடையப் பாரு சித்தெறும்பாட்டம்

பெண்: நன்றி கெட்ட கூட்டத்துக்கு நல்ல மருந்து இருக்கு நன்றி கெட்ட கூட்டத்துக்கு நல்ல மருந்து இருக்கு அத சொல்லட்டுமா உனக்கு நாயின் வால அளவெடுத்து நாலங்குலம் நறுக்கு நாயின் வால அளவெடுத்து நாலங்குலம் நறுக்கு அதத் தைலமாக இறக்கு

பெண்: நாற்பது நாள் தலையில் வச்சு தேச்சுப்பாரு அதுக்கு பலன் தெரிஞ்சுக்கலாம் பிறகு நடத்தை மாறி நாயைப் போல காலை சுத்தித் திரியும் நம்மை கண்டவுடன் குழையும்

பெண்: இந்த சின்னக் குட்டி நடையப் பாரு சித்தெறும்பாட்டம் சின்னக் குட்டி நடையப் பாரு சித்தெறும்பாட்டம்

பெண்: ஐயா கருக்கா பல்லு.. ஆலும் வேலும் சேத்து செஞ்ச அற்புத பல்பொடி இருக்கு இதை வாங்கிப் பல்லையும் விலக்கு பளபளப்பான பல்லைப் பார்த்து பருவப் பெண்ணும் மயங்கும் உன்னை பாசத்தோட நெருங்கும்.. ஆ..ஆ…ஆஅ…ஆ…ஆ…அ

பெண்: பானைத் தொந்தி கரைவதற்கு மருந்து தேவையில்லே நல்லா கேளுங்கோ என் சொல்ல பாடுபட்டு வேளை செஞ்சா ஊளைச் சதையும் கரையும் மனப் பாரங் கூடக் கொறையும்

பெண்: இந்த சின்னக் குட்டி நடையப் பாரு சித்தெறும்பாட்டம் சின்னக் குட்டி நடையப் பாரு சித்தெறும்பாட்டம்

பெண்: கட்சி விட்டு கட்சி தாவும் புத்தியுள்ள பேர்க்கு ஒரு புது மருந்து இருக்கு கட்சி விட்டு கட்சி தாவும் புத்தியுள்ள பேர்க்கு ஒரு புது மருந்து இருக்கு பற்றியதைக் கைவிடாத உடும்பு மூளைச் சரக்கு இதை உண்டால் தீரும் கிறுக்கு

பெண்: இந்த சின்னக் குட்டி நடையப் பாரு சித்தெறும்பாட்டம்

பெண்: நான் கண்ணை வெட்டி கழுத்தையாட்டி கையை நீட்டி மருந்து வித்தா கூடுற கூட்டம் எதேஷ்டம் கூடுற கூட்டம்…

பெண்: சின்னக் குட்டி நடையப் பாரு சித்தெறும்பாட்டம்