Chidambara Ragasiyam cover

Movie: Chidambara Ragasiyam (1985)
Music: Shankar Ganesh
Lyricists: Idhaya Chandran
Singers: Jayachandran and S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: மாலை வருகிற நேரம் ஏதோ ஒரு வகை தாகம் கண்கள் போடுது தாளம் உதடுகள் எங்கும் வாலிப மேளம் எடுக்கவா வா வா கொடுக்கவா…

பெண்: மாலை வருகிற நேரம் ஏதோ ஒரு வகை தாகம் கண்கள் போடுது தாளம் உதடுகள் எங்கும் வாலிப மேளம் எடுக்கவா வா வா கொடுக்கவா…

பெண்: பாவை இடை தொடும் வரை பெண்மை தாங்காது ராஜ சுகம் வரும் வரை கண்கள் மூடாது
ஆண்: லாலா லல நூறு கலை தினம் தரும் மஞ்சம் பாராட்டும் கோடி யுகம் வரை உனை ஜீவன் தாலாட்டும்
பெண்: மழைதான் வருமோ மலர் மேல் விழுமோ
ஆண்: பூவை தீண்டிட தென்றல் காதலன் நேரம் பார்ப்பதுண்டோ

பெண்: மாலை வருகிற நேரம் ஏதோ ஒரு வகை தாகம்
ஆண்: கண்கள் போடுது தாளம்
பெண்: உதடுகள் எங்கும் வாலிப மேளம்
ஆண்: எடுக்கவா
பெண்: வா வா கொடுக்கவா…

ஆண்: வாடை எனும் தணல் சுடும் தென்றல் தீயாகும் தேவி வரம் தரும் வரை தேகம் போராடும்
பெண்: பாய்கிறதே மதன் கணை பாவை என் மீது காவலனே எனை அணை பாவம் உன் மாது
ஆண்: இனிமேல் தடையோ மடிமேல் வரவோ
பெண்: வானில் நீந்திடும் மேகத் தேர்களை நாளும் ஊர்வலமோ

ஆண்: மாலை வருகிற நேரம்
பெண்: ஏதோ ஒரு வகை தாகம்
ஆண்: கண்கள் போடுது தாளம் உதடுகள் எங்கும் வாலிப மேளம்
பெண்: கண்கள் போடுது தாளம் உதடுகள் எங்கும் வாலிப மேளம்
ஆண்: எடுக்கவா
பெண்: வா வா கொடுக்கவா…

ஆண்: லல லல்லா
பெண்: லாலா லல்ல லலா இருவர்: லல லல்லா லாலா லல்ல லலா