Lyricist Na. Muthukumar

கிளியே கிளியே பாடல் வரிகள்

தம்பி போற ஊருக்கு வழி சொல்லு
தம்பி போற ஊருக்கு வழி சொல்லு
கருப்பா நீ கொஞ்சம் வழி சொல்லு
பொறுப்பா நீ கொஞ்சம் வழி சொல்லு

என் கொழந்த கூட வழி சொல்லும்
அந்த பறவை கூட வழி சொல்லும்
உன் எடக்கு பாட்ட நிப்பாட்டு
அப்ப தம்பிக்கு நீயே வழி காட்டு

அட எங்க ஊரு அந்த பக்கம் வேலையெல்லாம்
முடிஞ்சதும் வண்டி கட்டி கூட்டி போறேன் டேய்

கிளியே கிளியே கீ கீ கிளியே கிளியே
கிளியே கீ கீ கிளியே குயிலே குயிலே கூ கூ குயிலே

அட கிளிதான் கிளிதான் நான் கூட
என் மனச கூண்டுல அடச்சாலே
அட குயில் தான் குயில் தான் நான் கூட
என்ன இதய கூட்டில வெச்சாளே

காதல் நெனப்புல நானும் கூடத்தான் காத்தில் பறக்குறேன்
கிளியே கிளியே கீ கீ கிளியே குயிலே குயிலே கூ கூ குயிலே

அவள பாத்த போது என் பாதி உசுர பாத்தேன்
உயிரும் உயிரும் பேசும் பாஷையே மூச்சுகுள்ளே கேட்டேன்

அவ எதிரே வந்து நின்னா என் மீதி உசுர தருவேன்
பார்வ படுகிற தூரம் போதுமே பக்தன் போல கெடப்பேன்

அவ சிரிச்சா வெளிச்சம் உருவாகும்
அவ எமிச்சா உலகம் இருட்டாகும்

அவ பாத்தா போதும் பசி போகும்
அவ இருக்கும் திசையே அழகாகும்

ரெண்டு நொடிக்கு மேல் நடுவு கூட நான்
அவள நெனைக்கிறேனே

கிளியே கிளியே கீ கீ கிளியே குயிலே
குயிலே கூ கூ குயிலே

சில பொண்ணு சிரிப்பு அழகு சில பொண்ணு பேச்சு அழகு
திமுரு கூட ஒரு அழகு என்று நான் அவள பார்த்து அறிஞ்சேன்

சில பொண்ணு பாக்க அழகு சில பொண்ணு பழக அழகு
ரெண்டு அழகுமே ஒன்னு சேர்ந்ததா அவள நானும் பாத்தேன்

அவ கொடைய மறந்து வரும் போது
நான் மழைய ரசிக்க மாட்டேனே

என் நிழல்தான் அவ மேல் விழும்போதும்
நான் வெயில வெறுக்க மாட்டேனே

என்ன மாத்தினா ரத்த ஓட்டத்தில் தேன ஊத்தினாளே
கிளியே கிளியே கீ கீ கிளியே குயிலே
குயிலே கூ கூ குயிலே ஹோ ஹோய்…

Movie: Unakkum Enakkum
Lyrics: Na. Muthukumar
Music: Devi Sri Prasad