ஆயிரம் ஜன்னல் வீடு பாடல் வரிகள்
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
அடை காக்கிற கோழியப் போலவே
இந்த கூட்டைக் காப்பது யாருங்க
அழகான அம்மன போலவே
எங்க அப்பத்தாவப் பாருங்க
ஏய் சுத்துறான் சுத்துறான் காதுலதான் சுத்துறான்
வீசுறான் வீசுறான் வலையத்தானே வீசுறான்
பாசமான புலிங்க கூட பத்துநாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
வீரபாண்டித் தேரப் போல இந்த வீட்டப் பாரு பாரு
வீரமான வம்சத்தாளு இவங்களப் போல் யாரு
சித்தப்பாவின் மீசையப் பார்த்தா சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும்
சித்தியோட மீன் கொழம்புக்கு மொத்த குடும்பம் அடங்கும்
கோழி வெரட்ட வைரக்கம்மல் கழட்டித்தானே எறிவாங்க
திருட்டுப்பயல புடுச்சுக் கட்ட கழுத்துச் செயின அவுப்பாங்க
காட்டுறான் காட்டுறான் கலர்படம் காட்டுறான்
நீட்டுறான் நீட்டுறான் வாய ரொம்ப நீட்டுறான்
சொந்த பந்தம் கூட இருந்தா நெருப்புல நடக்கலாம்
வேலு அண்ணன் மனசுவச்சா நெருப்பயே தாண்டலாம்
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
சொக்கம்பட்டி ஊருக்குள்ள ஒடுதொரு ஆறு ஆறு
ஆத்துக்குள்ள அயிரமீனும் சொல்லுது உன் பேரு
சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி நாட்டாமதான் யாரு யாரு
பஞ்சாயத்து திண்ணையும் சொல்லும் தாத்தாவோட பேரு
வாசக்கதவு தொரந்தே இருக்கும் வந்த சொந்தம் திரும்பாது
வேட்டையாடப் போனா ஐயா நூறு சிங்கம் புடிப்பாரு
ஐயோ வைக்கிறான் வைக்கிறான் ஐசத்தூக்கி வைக்கிறான்
கத்துறான் கத்துறான் காரியமா கத்துறான்
ஈரமுள்ள இதயம் இருந்தால் ஈட்டியத்தான் தாங்கலாம்
வேலு அண்ணன் மனசவச்சா இந்த வீட்டில் தங்கலாம்
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
அடை காக்கிற கோழியப் போலவே இந்த கூட்டைக் காப்பது யாருங்க
அழகான அம்மன போலவே எங்க அப்பத்தாவப் பாருங்க
கவுத்துட்டான் கவுத்துட்டான் குடும்பத்தையே கவுத்துட்டான்
போட்டுட்டான் போட்டுட்டான் டேராவத்தான் போட்டுட்டான்
பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்…
Movie: Vel
Lyrics: Na. Muthukumar
Music: Yuvan Shankar Raja