Apoorva Raagangal cover

Movie: Apoorva Raagangal (1975)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ…ஆஅ..ஆஅ..ஆஅ… ஹா…ஆஅ…ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ.. ஹாஆ…ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ..ஆஅ. ஹா…ஆஅ…ஆஅ..ஆஅ..ஆஅ..

பெண்: ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி

பெண்: ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்

பெண்: காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்.ம்ம்ம்.. ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ஹா…ஆஅ…ஆஅ..ஆஅ… ஹா..ஆஅ..ஆ..

பெண்: காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி அது ஹா…ஆஅ…ஆஅ..ஆஅ… ஹா..ஆஅ..ஆ..

பெண்: காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி

பெண்: ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் மனிதன் இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

பெண்: ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…ல்ல்ல்ல்…

பெண்: எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் ஹா…ஆஅ…ஆஅ..ஆஅ. ஹா..ஆ.ஆஅ..

பெண்: எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் நீ எனக்காக உணவு உண்ட எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதில் நமக்காக நம் கையால் செய்வது நன்று நமக்காக நம் கையால் செய்வது நன்று

பெண்: ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…

பெண்: ஆரம்பத்தின் பிறப்பும் உன் கையில் இல்லை..ஈ..ஈ.. ஹா…ஆஅ…ஆஅ..ஆஅ. ஹா..ஆ.ஆஅ..

பெண்: ஆரம்பத்தின் பிறப்பும் உன் கையில் இல்லை என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

பெண்: ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…

பெண்: நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க

பெண்: வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல வேதனையும் மாறும் மேகத்தைப் போல

பெண்: ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்

பெண்: ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்… ஹா…ஆஅ…ஆஅ..ஆஅ.ஹா..ஆ.ஆஅ.. ஹா…ஆஅ…ஆஅ..ஆஅ.ஹா..ஆ.ஆஅ..