Lyricist Kannadasan

யாருக்காக பாடல் வரிகள்

யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை

யாருக்காக இது யாருக்காக
காதலே போ போ சாதலே வா வா

மரணம் என்னும் தூது வந்தது அது மங்கை என்னும் வடிவில் வந்தது
மரணம் என்னும் தூது வந்தது அது மங்கை என்னும் வடிவில் வந்தது

சொர்கமாக நான் நினைத்தது இன்று நரகமாக மாறிவிட்டது
யாருக்காக இது யாருக்காக

மலரை தானே நான் பறித்தது கை முள்ளின் மீது ஏன் விழுந்தது
உறவை தானே நான் நினைத்தது என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது

எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கமில்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில் இவன் பைத்தியக்காரன் என்று

கண்கள் தீட்டும் காதல் என்பது அது கண்ணில் நீரை வர வழைப்பது
பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை பித்தனாக்கி அலைய வைப்பது
யாருக்காக

எங்கிருந்து சொந்தம் வந்தது இன்று எங்கிருந்து நஞ்சு வந்தது
எங்கிருந்து சொந்தம் வந்தது இன்று எங்கிருந்து நஞ்சு வந்தது
அங்கிருந்து ஆட்டுகின்றவன் தினம் ஆடுகின்ற நாடகம் இது

யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக யாருக்காக யாருக்காக…

Movie: Vasantha Maligai
Lyrics: Kannadasan
Music: K. V. Mahadevan