Anaiyaatha Deepam Song Lyrics

Movie: Yaarukkum Vetkamillai (1975)
Music: G. K. Venkatesh
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ம்ம்..ம்ம்..ம்ம்.. ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம் அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ

பெண்: கால் போன ஜீவனை தோள் மீது கொண்டு காப்பாற்றி வைத்தான் சித்தார்த்த தேவன் சிந்தாத கண்ணீர் நான் சிந்துகின்றேன் சித்தார்த்தன் இங்கே யாரேனும் உண்டோ

பெண்: பாவங்கள் சிலர் செய்ய நான் பாவியானேன் பரிகாரம் எங்கே தேவா…தேவா…

பெண்: அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ

பெண்: நபிநாயகம் தன் நகர் மாறிச் சென்றார் அயலார்கள் ஏச வருங்காலம் பேச எதிர்கால உலகில் மரமாக நின்றார் இங்கேயும் அவரின் நிழல் வாழுகின்றார் எல்லார்க்கும் தாயான மாகாளி சக்தி என் தெய்வம் நீயே நீயே தாயே…

பெண்: கலைமாது மேரி ஓர் விலைமாது என்று கல்லால் எறிந்தார்கள் ஊரார்கள் அன்று நல்லோர்கள் அவள் மேல் எறியுங்கள் என்று அல்லோர்கள் தம்மை அறியுங்கள் என்று

பெண்: ஈசோன் என்ற ஒரு தேவன் சொன்னான் எறியுங்கள் நீங்கள் எறியுங்கள் நீங்கள் ஐயா….ஐயா…

பெண்: அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ