Lyricist Vairamuthu

தாஜ்மகால் தேவையில்லை பாடல் வரிகள்

தாஜ்மகால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே

இந்த பந்தம் இன்று வந்ததோ ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ

தாஜ்மகால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே

பூலோகம் என்பது பொடியாகிப் போகலாம்
பொன்னாரமே நம் காதலோ பூலோகம் தாண்டி வாழலாம்

ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்

கண்ணீரில் ஈரமாகிக் கறையாச்சுக் காதலே
கறை மாற்றி நாமும் மெல்ல கரையேற வேண்டுமே

நாளை வரும் காலம் நம்மை கொண்டாடுமே..

தாஜ்மகால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே

சில்வண்டு என்பது சில மாதம் வாழ்வது சில்வண்டுகள்
காதல் கொண்டால் செடி என்ன கேள்வி கேட்குமா

வண்டாடும் காதலைக் கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்ப பாவமென்பதா

வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே
வாழாத பேர்க்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே

வானும் மண்ணும் பாடல் சொல்லும் நம் பேரிலே..

தாஜ்மகால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே

இந்த பந்தம்.. இன்று வந்ததோ ஏழு ஜென்மம்.. கண்டு வந்ததோ
உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ

தாஜ்மகால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே…

Movie: Amaravathi
Lyrics: Vairamuthu
Music: Bala Bharathi