Lyricist Kabilan

சொல்லி தரவா பாடல் வரிகள்

சொல்லி தரவா சொல்லி தரவா மெல்ல மெல்ல வா வா வா அருகே
அள்ளித்தரவா அள்ளித்தரவா அள்ள அள்ள தீராதே அழகே
உன்னை நினைத்தேன் நித்தம் தவித்தேன் தள்ளித் தள்ளிப் போகாதே உயிரே
அள்ளித்தரவா அள்ளித்தரவா அள்ள அள்ள தீராதே அழகே

காதல் தொட்டில் பழக்கம் நீளும் கட்டில் வரைக்கும் காமன் வீட்டு தாழ் திறக்கும்
ஆண் பெண் உள்ள வரைக்கும் காதல் கண்ணை மறைக்கும் தீயில் கூட தேன் இருக்கும்

காதல் மழை தூறுமே கட்டில் கப்பல் ஆடுமே
பெண்மை தடுமாறுமே மானம் கப்பல் ஏறுமே

ஏட்டுப் பாடங்கள் ஏதும் இல்லாத வீட்டுப் பாடம் இது
சொல்லி தரவா சொல்லி தரவா மெல்ல மெல்ல வா வா வா அருகே
அள்ளித்தரவா அள்ளித்தரவா அள்ள அள்ள தீராதே அழகே

ஆசை யாரை விட்டது நாணம் கும்மி கொட்டுது
மோகம் என்னும் முள் தைத்தது
வார்த்தை உச்சி கொட்டுது பார்வை
பச்சை குத்துது தேகம் எங்கும் தேள் கொட்டுது

பார்வை என்னைத் தீண்டுமே கைகள் எல்லை தாண்டுமே
பூவை தொடும் நேரமே புத்தி மாறிப் போகுமே

இங்கே என் காதல் சொல்லும் எல்லாமே நீ கற்றது
சொல்லி தரவா சொல்லி தரவா மெல்ல மெல்ல வா வா வா அருகே..

அள்ளித்தரவா அள்ளித்தரவா அள்ள அள்ள தீராதே அழகே
உன்னை நினைத்தேன் நித்தம் தவித்தேன் தள்ளித் தள்ளிப் போகாதே உயிரே…

Movie: Majaa
Lyrics: Kabilan
Music: Vidyasagar