Aranmanai 3 cover

Movie: Aranmanai 3 (2021)
Music: C. Sathya
Lyricists: Pa.Vijay
Singers: Reema

Added Date: Feb 11, 2022

பெண்: செங்காந்தலே உனை அள்ளவா செல்ல தென்றலே உனை ஏந்தவா அழைத்தேன் உன்னை என்னோடு இருப்பேன் என்றும் உன்னோடு அன்பே உன் கைகள் என்னை தீண்டுமா

பெண்: மிதந்தேன் காற்றில் காற்றாக நடந்தேன் இரவில் நிழலாக கண்ணே உன் கண்கள் என்னை காணுமா

பெண்: ஆராரோ . ஆராரிரோ . ஆராரோ . ஆராரிரோ .

பெண்: சின்ன சின்ன மலர் குவியலை போல் எனக்குள் மலர்ந்தாய் என்ன என்ன உயிர் சிலிர்க்க வைத்து கருவில் அசைந்தாய் உன்னைப் பெறும் அன்னை வலி வலியல்ல ஓர் வரமே என் மார்பிலே கூடு கட்டி நீ உறங்கிடும் நாள் வருமே

பெண்: பால் கசியும் இதழோடு உன்னைக் காணவே தெய்வம் கூட ஓசை இன்றி வந்து போகுமே

பெண்: செங்காந்தலே உனை அள்ளவா செல்ல தென்றலே உனை ஏந்தவா

பெண்: அன்னை நெஞ்சில் அனல் எரிகையிலே மழை போல் வந்தாய் எந்த திசையிலும் இருட்டுக்குள் தான் வெளிச்சம் தந்தாய்

பெண்: ஜென்மம் ஒன்று போதாதென்று ஏழு ஜென்மம் நான் சுமப்பேன் என் வாழ்விலே ஒரே இன்பம் கண்ணில் வைத்து போர்த்து கொள்வேன்

பெண்: உன் மேல் தூசும் தீண்டாமல் காப்பேன் அன்பே காலம் முழுதும் உனக்காக வாழ்வேன் அன்பே

பெண்: செங்காந்தலே. ஆராரிரோ சின்ன தென்றலே.. ஆராரிரோ