Amara Kaaviyam cover

Movie: Amara Kaaviyam (2014)
Music: M. Ghibran
Lyricists: Madhan Karky
Singers: M. Ghibran, Thomson Andrews and Yazin Nizar

Added Date: Feb 11, 2022

குழு: ………..

ஆண்: இதன் முன்னே சிறுவன் நான் இனிமேலே இளைஞன் நான் இரண்டுக்கும் நடுவில் நீ சரிதானா…ஆஅ..ஆ..

ஆண்: இதன் முன்னே சிநேகிதி நீ இனிமேலே காதலி நீ இரண்டுக்கும் நடுவில் நான் சரிதானா…ஆஅ..ஆ..

ஆண்: நிழல் ஓவியங்கள் நாம்தானா..ஆஅ..ஆஅ..ஆஅ.. நிகழ்கின்ற மாயம் சரிதானா…ஆஅ..ஆ..

ஆண்: சரிதானா முறைதானா இது நானா நானா நானா வீழ்வேனா எழுவேனா இனி நானும் நானும் ஆணா சரிதானா முறைதானா இது நானா நானா நானா வீழ்வேனா எழுவேனா இனி நானும் நானும் ஆணாஆணா

ஆண்: இதன் முன்னே சிறுவன் நான் இனிமேலே இளைஞன் நான் இரண்டுக்கும் நடுவில் நீ சரிதானா…ஆஅ..ஆ..

குழு: ……..

ஆண்: யாவும் புதியதாய் தெரியும் வயது யாவும் அழகாய் விழியில் விழியில் தெரிகிறதே..ஏ.. நேற்று என் காதிலே கேட்ட பாடலே வேறென்ன மாறியே கேட்பது சரிதானா..ஆஅ..

ஆண்: சரிதானா முறைதானா இது நானா நானா நானா வீழ்வேனா எழுவேனா இனி நானும் நானும் ஆணா சரிதானா முறைதானா இது நானா நானா நானா வீழ்வேனா எழுவேனா இனி நானும் நானும் ஆணாஆணா

ஆண்: நெஞ்சம் தடுமாறும் பருவம் இதுவோ பெண்கள் பார்த்தால் லேசாய் இதயம் கணக்கிறததோ தோழனின் காதலில் தோழியா தங்கையா ரெண்டுமே இல்லையா கேள்வியே சரிதானா..ஆஅ..

ஆண்: அழகான கிறுக்கல் நாம் முடிவில்லா தெருவும் நாம் குளிர் காற்றின் குறும்பும் நாம் இனிமேலே…ஏ..ஏ…

ஆண்: நிழல் ஓவியங்கள் நாம்தானா..ஆஅ.ஆஅ..ஆ. நிகழ்கின்ற மாயம் சரிதானா…ஆஅ..ஆ..

ஆண்: சரிதானா சரிதானா இது நானா நானா நானா சரிதானா சரிதானா இனி நானும் நானும் ஆணா சரிதானா சரிதானா இது நானா நானா நானா சரிதானா சரிதானா இனி நானும் நானும் ஆணா