Lyricist Vairamuthu

சஹானா சாரல் தூவுதோ பாடல் வரிகள்

சஹானா சாரல் தூவுதோ சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹாரா பூக்கள் பூத்ததோ சஹானா சாரல் தூவுதோ

என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ
அடடா அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ

கனவோ நிஜமோ காதல் மந்திரமோ
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

சஹாரா பூக்கள் பூத்ததோ சஹானா சாரல் தூவுதோ

தீம் தன தீம் தன தின நா தின நா நா நா
தீம் தன தீம் தன தின நா தின நா நா நா
தீம் தன தீம் தன தின நா தின நா நா நா
தீம் தன தீம் தன தின நா தின நா நா நா

தலைமுதல் கால்வரை தவிக்கின்ற
தூரத்தை இதழ்களில் கடந்துவிடு
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு

பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை பூக்களில்
நிரப்பட்டுமா ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்
பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்குள் நடக்கட்டுமா ஹோ

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது ஹோ
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

சஹானா சாரல் தூவுதோ சஹாரா பூக்கள் பூத்ததோ

என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ

கனவோ நிஜமோ காதல் மந்திரமோ
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

சஹாரா சாரல் தூவுதோ ஹோ ஓ ஓ ஓ
சஹாரா பூக்கள் பூத்ததோ…

Movie: Sivaji
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman