Lyricist Kabilan

ஹே ராஜாத்தி ராஜாத்தி ராஜா நானே பாடல் வரிகள்

ஹே ராஜாத்தி ராஜாத்தி ராஜா நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே
ஆகாயம் என்னோட எல்லைக் கோடு

ஆனந்த பூமி என் சொந்த வீடு
நோட்டு வாங்காம ஓட்டு போடு
போதை வாழ்க்கைக்கு பூட்டு போடு
கூடி கொண்டாடி பாட்டு பாடு
ஆடி காத்த போல் ஆட்டம் போடு

ஹே ராஜாத்தி ராஜாத்தி ராஜா நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே
நம்பிக்கை இல்லாமல் வாழாதடா
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா

ஹே ஹே ஹே ஹே ஹேய்…..

ஹே காலம் உந்தன் கையில் உண்டு
வீரம் கொண்டால் வெற்றி உண்டு
வாழ்க்கை என்ன வாழைத்தண்டு
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு…
பாதி கண்ணால பாரு பொண்ணு
சாதி பாக்காம காதல் பண்ணு

வாழும் போதே நீ வாழ எண்ணு
வாழும் வாழ்க்கை தான் ஒன்னே ஒன்னு
உலகம் முழுக்க ஜாலி உனக்கு எதுக்கு வேலி
புயலை ஜெயிக்க வாடா புதிய பறவையா

ஹே ராஜாத்தி ராஜாத்தி ராஜா நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே
நம்பிக்கை இல்லாமல் வாழாதடா
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா

ஹே நட்பு என்னும் கூட்டுக்குள்ளே
கூடி வாழ்வோம் குருவி போல பூமி மேல பூத்திருப்போம்
வானவில்லின் வண்ணம் போல

நேற்றை இன்றைக்கோ பாக்காதேடா
நாளை உன் வாழ்க்கை தோற்க்காதடா
வீட்டு பிள்ளையா நீ இருந்து

கூண்டு கிளி போல வாழாதடா இரவும் பகலும் ஆடு
இளமை உனக்கு ஈடு உலகம் உனது வீடு
தனிமை எதுக்குடா…

ஹே ராஜாத்தி ராஜாத்தி ராஜா நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே
ஹே நம்பிக்கை இல்லாமல் வாழாதடா
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா….
நோட்டு வாங்காம ஓட்டு போடு
போதை வாழ்க்கைக்கு பூட்டு போடு
கூடி கொண்டாடி பாட்டு பாடு
ஆடி காத்த போல் ஆட்டம் போடு

ராஜாத்தி ராஜாத்தி ராஜா நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே
ஆகாயம் உன்னோட எல்லைக் கோடு
ஆனந்த பூமியும் சொந்த வீடு…

Movie: Nimirndhu Nil
Lyrics: Kabilan
Music: G. V. Prakash Kumar