Lyricist Kabilan

காதல் நேர்கையில் மௌனம் பேசும் பாடல் வரிகள்

காதல் நேர்கையில் மௌனம் பேசும்
காதல் பார்வையில் கண்கள் கூசும்

மணல் சாலையில் நடந்தேனடி மழை ஊற்றினாய் உயிரே
மதில் பூனையாய் இருந்தேனடி எனை மாற்றினாய் உயிரே

நீ யாரோ நீ யாரோ நீதான் என் ஏவாளோ
காதல் நேர்கையில் மௌனம் பேசும்
காதல் பார்வையில் கண்கள் கூசும்

ஓ.. கூந்தல் வீணை நீ கோயில் யானை நான்
உந்தன் கண்களால் ஊரை பார்க்கிறேன்

பாறை போல வாழ்ந்த நானே சிற்பமாகிறேன்
பாதி தூரம் போன பின்னே பாதை காண்கிறேன்
உன்னாலே உன்னாலே என் தேடல் உன்னாலே
தானன தானன …

காதல் நேர்கையில் மௌனம் பேசும்
காதல் பார்வையில் கண்கள் கூசும்

மணல் சாலையில் நடந்தேனடி மழை ஊற்றினாய் உயிரே
மதில் பூனையாய் இருந்தேனடி எனை மாற்றினாய் உயிரே

நீ யாரோ நீ யாரோ நீ எந்தன் ஆதாமோ
தேடி பார்க்கிறேன் என்னை நானே
தேவையாகுமே நீயாய் ஆனேன்…

 

Movie: Thani Oruvan
Lyrics: Kabilan
Music: G. V. Prakash Kumar