Azhiyadha Kolangal cover

Movie: Azhiyadha Kolangal (1979)
Music: Salil Chowdhury
Lyricists: Gangai Amaran
Singers: P. Susheela and Jayachandran

Added Date: Feb 11, 2022

ஆண்: பூ வண்ணம்.. போல நெஞ்சம்… பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் எங்கெங்கும் இன்பம் ராகம் என் உள்ளம் போடும் தாளம்

பெண்: பூ வண்ணம்… போல நெஞ்சம்.. பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் எங்கெங்கும் இன்பம் ராகம் என் உள்ளம் போடும் தாளம்

இருவர்: பூ வண்ணம்… போல நெஞ்சே….ஹே. ஏஹே.

ஆண்: ஆ ஹாஹா.
பெண்: ஆ ஹாஹா.

பெண்: இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ

ஆண்: பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ

பெண்: இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ

ஆண்: பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ

பெண்: இணைந்த வாழ்வில் பிரிவுமில்லை தனிமையும் இல்லை

ஆண்: பிறந்தால் எந்த நாளும் உன்னோடு சேர வேண்டும்

பெண்: பூ வண்ணம்… போல நெஞ்சம்..
ஆண்: பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
பெண்: எங்கெங்கும் இன்பம் ராகம் என் உள்ளம் போடும் தாளம்

இருவர்: பூ வண்ணம்… போல நெஞ்சே…ஹே. ஏஹே.

ஆண்: படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள் துடிக்கும் தேகமோ என் வெள்ளங்கள்

பெண்: பனிக்குள் வாட்டங்கள் அணைக்கும் மூட்டங்கள் என் இன்பங்கள்

ஆண்: படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள் துடிக்கும் தேகமோ என் வெள்ளங்கள்

பெண்: பனிக்குள் வாட்டங்கள் அணைக்கும் மூட்டங்கள் என் இன்பங்கள்

ஆண்: பிணையும் போது இனிய எண்ணம் என்றும் நம் சொந்தம்

பெண்: இமைக்குள் ஏழு தாளம் என்றென்றும் காண வேண்டும்

ஆண்: பூ வண்ணம்.. போல நெஞ்சம்…
பெண்: பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
ஆண்: எங்கெங்கும் இன்பம் ராகம் என் உள்ளம் போடும் தாளம்

இருவர்: பூ வண்ணம்… போல நெஞ்சே…ஹே. ஏஹே. ஹே. ஏஹே. ஹே. ஏஹே.