Lyricist Pa.Vijay

பொம்பளைங்க பாடல் வரிகள்

பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே நம்பிவிடாதே
நம்பியதால் நொந்துமனம் வெம்பிவிடாதே வெம்பிவிடாதே

அத்தான்னு சொல்லியிருப்பா ஆசையக்காட்டி
அண்ணான்னு சொல்லி நடப்பா ஆளையும் மாத்தி

ஆம்பளையெல்லாம் அஹிம்சாவாதி
பொம்பளையெல்லாம் தீவிரவாதி

பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே நம்பிவிடாதே
நம்பியதால் நொந்துமனம் வெம்பிவிடாதே வெம்பிவிடாதே

பெண்ணாலே பைத்தியமா போனவனுண்டு
இங்க ஆண்களாலே பைத்தியமா ஆனவளுண்டா

பெண்ணாலே காவிகட்டி நடந்தவனுண்டு
இங்க ஆண்களாலெ காவிகட்டி நடந்தவளுண்டா
பெண்ணுக்கு தாஜுமஹால் கட்டிவச்சான்டா

எவளாச்சும் ஒருசெங்கல் நட்டுவச்சாளா
நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே
நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே

பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே நம்பிவிடாதே
நம்பியதால் நொந்துமனம் வெம்பிவிடாதே வெம்பிவிடாதே

பெண்ணெல்லாம் பரீட்சையிலே முதலிடந்தாங்க
நம்ம பசங்களத்தான் எங்கே அவங்க படிக்கவிட்டாங்க

பெண்ணெல்லாம் தங்க மெடல் ஜெயிச்சு வந்தாங்க
நம்ம பையன் முகத்தில் தாடியைத்தான் முளைக்கவச்சாங்க

பெண்ணெல்லாம் உலக அழகி ஆகிவந்தாங்க
ஆண்ணெல்லாம் காதலிச்சே தலை நரைச்சாங்க…

நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே
நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே

பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே நம்பிவிடாதே

பொம்பளைங்க பொம்பளைங்க மோசம் இல்லைங்க
மோசம் இல்லைங்க பொம்பளைங்க இல்லையினா
நீங்க இல்லைங்க நானும் இல்லைங்க

உன்னை இங்கே பெத்தவளும் பொம்பளைதானே
உன்னோட பொறந்தவளும் பொம்பளைதானே

தப்பு செய்யாதே நீ பொண்ண திட்டாதே
தப்பு செய்யாதே நீ பொண்ண திட்டாதே…

Movie: Unnai Ninaithu
Lyrics: P. Vijay
Music: Sirpy