Asuran cover

Movie: Asuran (2019)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Yugabharathi
Singers: Dhanush, G. V. Prakash Kumar, Ken Karunas and Tee Jay

Added Date: Feb 11, 2022

ஆண்: பொல்லாதபூமி பொலிப்போடும் ஆள முன்னால போனா நறுக்காதோ கால அன்போட நின்னா தல வணங்கும் ஊரு ஆவேசம் ஆனா உயிரெடுக்கும் பாரு

ஆண்: வீராப்புத்தான் வேணாம்மய்யா வீட்டோட இரு நீ தொணையாக சூலாயுதம் நீ தூக்குனா வில்லங்கம் வருமே வெனையாக

ஆண்: {உன் மீச முறுக்கால கொடி ஏத்து ஏத்து முப்பாட்டன் கொலம் காக்க வரலாற மாத்து} (2)

ஆண்: ஆகாசமா நின்னா நம அண்ணாந்து பாக்கும் ஜில்லாவே அப்பாவியா தள்ளாடுனா மல்லாந்து போவோம் மண்ணாவே ஓட்டாண்டியா ஆனாலுமே உள்ளூர வேணும் ஒரு தில்லு ஏமாத்துற ஆள எல்லாம் என்கூட மோத வர சொல்லு

ஆண்: யார் மேல யார் கீழ போடாத ரூலு போராட எண்ணாட்டி மாறாதே நாளு குத்தீட்டி மேல பாஞ்சாலும் கொய்யால கீழ சாஞ்சாலும் வெத்தான ஆளா நானும் ஆக மாட்டேன் மூச்சே போனாலும்

ஆண்: ஹேய் பொல்லாதபூமி பொலிப்போடும் ஆள முன்னால போனா நறுக்காதோ கால

ஆண்: கட்டாரியும் கோடாளியும் கையேந்தும் வாழ்வ மாத்தாதோ பச்சோந்தியா வாழாத உன் தன்மானம் ஊர காக்காதோ

ஆண்: மண்வாசனை உன்மேலத்தான் மக்காம வீசும் குடிகொண்டு உன் பேருல பத்தூரையும் பட்டாவ போடும் கவர்ன்மெண்ட்

ஆண்: ஆத்தாடி என் மவன் தானே அசகாய சூரன் காட்டேரி வந்தாலும் கலங்காத வீரன்

ஆண்: கொம்பேறி மூக்கன் உன் கூட்டு கூட்டாவே சேரும் என் பாட்டு கும்மாளாம் போட நானும் சேர்ந்தே வாரேன் ஒகே ஆல் ரைட்

ஆண்: {உன் மீச முறுக்கால கொடி ஏத்து ஏத்து முப்பாட்டன் கொலம் காக்க வரலாற மாத்து} (2)