Podhum Nee Ini Varundhadhe Song Lyrics

Movie: Vaayai Moodi Pesavum (2014)
Music: Sean Roldan
Lyricists: Muthamil
Singers: Haricharan

Added Date: Feb 11, 2022

ஆண்: போதும் நீ இனி வருந்தாதே நேரங்கள் அது திரும்பாதே இன்றை மட்டும் தேர்ந்தெடு..
குழு: ஊஊஹோ…
ஆண்: இந்த நொடி வாழ்ந்திடு
குழு: ஊஊஹோ…

ஆண்: மாறாமல் நிலை இருக்காதே தூறாமல் மழை துவங்காதே நேற்று அது தீரத்தான்
குழு: பபப்பாபா
ஆண்: நாளை அது தேடத்தான்

குழு: …….
ஆண்: காலம் இருக்கு நீ களித்திடு மறந்து காலால் உதைத்து உன் கவலைக்கு கை காட்டு ஓ..ஓ..ஓ..ஓஒ.. ஓ..ஓ..ஓ..ஓஒ..

ஆண்: வருவதை எதிர் எதிர் பார்த்துவிட்டு இருப்பதை உணர்த்திட மறந்து விட்டோம் கவலையில் தொலைவதை விலக்கி விட்டு பரவச புதையலில் புதைந்திடுவோம்

ஆண்: ஹே முட்டி முட்டி மோதிடத்தான் பூமியில் விதை முளைக்கும் ஹே வெட்டி வெட்டி செதிக்கிடத்தான் பாறைகளும் மினுக்கும் இன்றே இருக்கு…இதை நீ விரும்பு இரவை கலைத்து இனிமைகள் கொண்டாடு

குழு: ……..

ஆண்: நேரங்கள் பிரிந்தா பறந்திருக்கு நாமிங்கு ஒளிந்திட விலகிருக்கு சொந்தமாய் முகத்துக்கு சிரிப்பிருக்கு சுதந்திர இதழ் ஏன் தயங்கிடுது

ஆண்: உன் இதயம் துடிக்கிறது உனக்குள் இசை இருக்கு உற்று கொஞ்சம் நீ கேளு உன்னை சுற்றி இசை இருக்கு

ஆண்: பாதம் எடுத்து நீ பறந்திடு மறந்து நாடி துடித்து நடனங்கள் நீ ஆடு

ஆண்: போதும் நீ இனி வருந்தாதே நேரங்கள் அது திரும்பாதே இன்றை மட்டும் தேர்ந்தெடு..
குழு: ஊஊஹோ…
ஆண்: இந்த நொடி வாழ்ந்திடு..