Lyricist Na. Muthukumar

பற பற பற பட்டாம்பூச்சி பாடல் வரிகள்

பற பற பற பற பற பட்டாம் பூச்சி..

தொட தொட தொட தொட பல வண்ணமாச்சு..
இது ஒரு இது ஒரு புது கண்ணாமூச்சி..
இதயத்தின் வானிலையது மாறிப்போச்சு..

கண்ணீரை துடைக்கும் விரலுக்கு மனம் ஏங்கிக் கிடக்குதே..
தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு இலைப் படகு ஆனதே..

பற பற பற பற பற பட்டாம் பூச்சி..
தொட தொட தொட தொட பல வண்ணமாச்சு..
இது ஒரு இது ஒரு புது கண்ணாமூச்சி..
இதயத்தின் வானிலையது மாறிப்போச்சு..

இன்பம் ஒரு புறம் நின்று
துன்பம் மறுபுறம் நின்று சுற்றிச் சுழலுது இந்த மண் மேலே..
தன்னந் தனியாளென்று யாருமில்லை என்று
உள்ளம் சொல்லுது இன்று அன்பாலே..

ஏதோ ஏதோ ஓர் உணர்ச்சி.. எரிதளலில் மழையின் குளிர்ச்சி..
கடல் அலைகள் மோதி மோதி மணல் சிற்பமாகுதே..
எதிரிலே அந்த மழலைக்காலம் மீண்டும் திரும்புதே..

பற பற பற பற பற பட்டாம் பூச்சி..
தொட தொட தொட தொட பல வண்ணமாச்சு..
இது ஒரு இது ஒரு புது கண்ணாமூச்சி..
இதயத்தின் வானிலையது மாறிப்போச்சு..

வாழ்க்கை என்பது என்ன பள்ளிப் பாடமும் அல்ல
கற்றுக் கொண்டதே மெல்ல முன்னேற..
காதல் என்பது என்ன புள்ளிக் கோலமும் அல்ல
காற்றில் களையும் போது தள்ளாட..

எங்கோ எங்கோ ஓர் உலகம்
உனக்காக காத்துக் கிடக்கும்..
நிகழ்காலம் மதியைப் போல
மெல்ல நகர்ந்து போகுதே.. நதி காயலாம்..
நினைவில் உள்ள காட்சி காயுமா..

பற பற பற பற பற பட்டாம் பூச்சி..
தொட தொட தொட தொட பல வண்ணமாச்சு..
இது ஒரு இது ஒரு புது கண்ணாமூச்சி..
இதயத்தின் வானிலையது மாறிப்போச்சு..

கண்ணீரை துடைக்கும் விரலுக்கு
மனம் ஏங்கிக் கிடக்குதே..
தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு
இலைப் படகு ஆனதே..

பற பற பற பற பற பட்டாம் பூச்சி..
தொட தொட தொட தொட பல வண்ணமாச்சு..
இது ஒரு இது ஒரு புது கண்ணாமூச்சி..
இதயத்தின் வானிலையது மாறிப்போச்சு..

அது மாறிப்போச்சு.. மாறிப்போச்சு போச்சு..
மாறி மாறி போச்சு.. மாறிப்போச்சு போச்சு..
மாறி மாறி போச்சு…

Movie: Kattradhu Thamizh
Lyrics: Na. Muthukumar
Music: Yuvan Shankar Raja