Lyricist Kannadasan

ஒருவன் மனது ஒன்பதடா பாடல் வரிகள்

ஒருவன் மனது ஒன்பதடா..
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா..
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா..
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா..
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா..
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா..
ஒருவன் மனது ஒன்பதடா..
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா..

ஏறும் போது எரிகின்றான்..
இறங்கும்போது சிரிக்கின்றான்..
ஏறும் போது எரிகின்றான்..
இறங்கும்போது சிரிக்கின்றான்..
வாழும் நேரத்தில் வருகின்றான்..
வறுமை வந்தால் பிரிகின்றான்..
ஒருவன் மனது ஒன்பதடா..
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா..

தாயின் பெருமை மறக்கின்றான்..
தன்னல சேற்றில் விழுகின்றான்..
தாயின் பெருமை மறக்கின்றான்..
தன்னல சேற்றில் விழுகின்றான்..

பேய்போல் பணத்தை காக்கின்றான்..
பெரியவர் தம்மை பழிக்கின்றான்..

ஒருவன் மனது ஒன்பதடா..
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா..
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா..
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா..

Movie: Dharmam Thalai Kaakkum
Lyrics: Kannadasan
Music: K. V. Mahadevan