×
Tuesday 11th of May 2021

Chittu Kuruvi Mutham Song Lyrics in Tamil


சிட்டுக்குருவி முத்தம் பாடல் வரிகள்

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே..
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே..
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே..
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே..
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே..
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே..

மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே..
மூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே ஹோய்
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே..
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே..

ஆ…ஆ…ஆ…ஹாஹா….ஹா…ஹா…
பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே..
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே..
பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே..
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே..
எடுத்து சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே..
என்னென்னமோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்..
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே..
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே..

ஆ…ஆ…ஆ…ஹாஹா….ஆ…ஹாஹா
ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா..
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா..
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா..
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா…ஹோய்
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே..
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே..

Movie: Puthiya Paravai
Lyrics: Kannadasan
Music: Viswanathan Ramamoorthy


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 30, 2020
Aaru Maname Aaru Song Lyrics in Tamil
  • September 30, 2020
Mayakkama Kalakkama Song Lyrics in Tamil
  • September 30, 2020
Ninaipathellam Nadanthuvittal Song Lyrics in Tamil