Chinna Devan cover

Movie: Chinna Devan (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan and Minmini

Added Date: Feb 11, 2022

ஆண்: எங்க குல தெய்வமே சங்கலிக்கருப்பா
குழு: லுலுலுலுலுலுலுலு
ஆண்: எங்க குறை தீர்த்து நீ நிறைவாக்கவே ஓடோடி வா
குழு: லுலுலுலுலுலுலுலு

ஆண்: ஊருக்கொரு காவல் தெய்வமே.. நீ வேண்டிக் கொண்டால் ஏவல் செய்யுமே..

குழு: ஊருக்கொரு காவல் தெய்வமே.. நீ வேண்டிக் கொண்டால் ஏவல் செய்யுமே…

பெண்: புது மால கட்டிப் போட்டோம் சாமி ஒனக்கு இனி வாழும் வழி காட்டு நாளும் எமக்கு

ஆண்: புது மால கட்டிப் போட்டோம் சாமி ஒனக்கு இனி வாழும் வழி காட்டு நாளும் எமக்கு.

குழு: ஊருக்கொரு காவல் தெய்வமே… நீ வேண்டிக் கொண்டால் ஏவல் செய்யுமே..

ஆண்: முழிச்சிருக்கும் போது கண் முழியத் திருடும் ஊரு வேற இங்கு யாரு கொஞ்சம் கண்ணத் திறந்து பாரு திருடனையும் காத்து இது அரவணைக்கும் ஊரு உறவு முறை சொல்லும் இந்த வெட்கக்கேட்டைப் பாரு

பெண்: கருங்காலி கூடத்தான்…ஆஆஆ… காணிக்கை போடுவான்
குழு: கருங்காலி கூடத்தான் காணிக்கை போடுவான்

பெண்: வெறும் கையில் முழம் போட்டு வேடிக்கை காட்டுவான் பாலுக்கும் பூனைக்கும் ஓர் காவல் இங்கு நீயா

குழு: ஊருக்கொரு காவல் தெய்வமே.. நீ வேண்டிக் கொண்டால் ஏவல் செய்யுமே… ஊருக்கொரு காவல் தெய்வமே… நீ வேண்டிக் கொண்டால் ஏவல் செய்யுமே…

ஆண்: சாமி கையில் வேலும் அரிவாளும் கண்ட போதும் வீண் பழிக்கு அஞ்சா படுபாவிப்பய பூமி ஆளுக்கொரு நீதி இங்கு ஆட்சி செய்யும் போது ஏழைகள் அனாதை இனி வேறு கதி ஏது

பெண்: இனி மேலும் தாங்காதே… இடி தாங்கி ஆகாதே..
குழு: இனி மேலும் தாங்காதே இடி தாங்கி ஆகாதே

பெண்: மனம் வாடிப் போகாதே சுமை தாங்கி ஆகாதே நேர்த்திக் கடன் கழித்தே பூஜை செய்வோம் சாமி

ஆண்: ஊருக்கொரு காவல் தெய்வமே… நீ வேண்டிக் கொண்டால் ஏவல் செய்யுமே…
குழு: ஊருக்கொரு காவல் தெய்வமே… நீ வேண்டிக் கொண்டால் ஏவல் செய்யுமே..

பெண்: புது மால கட்டிப் போட்டோம் சாமி ஒனக்கு இனி வாழும் வழி காட்டு நாளும் எமக்கு

ஆண்: புது மால கட்டிப் போட்டோம் சாமி ஒனக்கு இனி வாழும் வழி காட்டு நாளும் எமக்கு

குழு: {ஊருக்கொரு காவல் தெய்வமே… நீ வேண்டிக் கொண்டால் ஏவல் செய்யுமே…} (2)