Deivapiravi cover

Movie: Deivapiravi (1985)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: மௌனம் என்னும் ராகம் விழி பாடுதோ மஞ்சள் மின்னும் தேகம் துணை தேடுதோ இளவேனிற் காலம்தானே சிறு பூவில் ஊறும் தேனே வாங்கவும் தாங்கவும் வேளை வந்ததோ…

பெண்: மௌனம் என்னும் ராகம் விழி பாடுதோ மஞ்சள் மின்னும் தேகம் துணை தேடுதோ இளவேனிற் காலம்தானே சிறு பூவில் ஊறும் தேனே வாங்கவும் தாங்கவும் வேளை வந்ததோ…

ஆண்: {நீர் ஓடையென நீ ஓடி வர நான் ஓடமென ஆடத்தான்
பெண்: பூமேனியில் ஓர் பாதியை மேலாடைகள் மூடத்தான்} (2)

ஆண்: நான் கொஞ்ச நீயும் கொஞ்ச நாணங்கள் போகக் கூடும்
பெண்: கண் பட்டு கைகள் பட்டு காயங்கள் ஆகக் கூடும்
ஆண்: நான் தீண்டினால் நோய் தீர்வதை நீ காணலாம் போக போக.

பெண்: மௌனம் என்னும் ராகம் விழி பாடுதோ

பெண்: {பூந்தென்றலென என் தாவணியை நீ நீக்குவது கூடாது
ஆண்: என் காதலி என் கை வசம் யார் கேட்பது இப்போது} (2)

பெண்: ஏனிந்த அன்புத் தொல்லை ஆசைக்கு எல்லை இல்லை
ஆண்: ஏகாந்த வேளை தானே ஆரம்ப லீலைதானே
பெண்: நான் வாடுவேன் போராடுவேன் உன் பார்வைகள் தூண்ட தூண்ட

ஆண்: மௌனம் என்னும் ராகம் விழி பாடுதோ
பெண்: மஞ்சள் மின்னும் தேகம் துணை தேடுதோ
ஆண்: இளவேனிற் காலம்தானே சிறு பூவில் ஊறும் தேனே
பெண்: வாங்கவும்
ஆண்: ஹ்ம்
பெண்: தாங்கவும்
ஆண்: ஹ்ம்
பெண்: வேளை வந்ததோ…