Annamitta Kai cover

Movie: Annamitta Kai (1972)
Music: K. V. Mahadevan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: மயங்கி விட்டேன்.. மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு வழங்கி விட்டேன் என்னை இன்று வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில் பின்னப் பின்ன என்ன சுகமோ

ஆண்: மயங்கி விட்டேன்… மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு வழங்கி விட்டேன் என்னை இன்று மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை சொல்லச் சொல்ல என்ன சுகமோ

ஆண்: எங்கெங்கே என்னென்ன
பெண்: ஆஹா
ஆண்: இன்பங்கள் தோன்றும் என்று துடிக்க

பெண்: அங்கில்லை
ஆண்: ஆஹா
பெண்: இங்கேதான்
ஆண்: ஓஹோ
பெண்: வாவென்று ஏதோ ஒன்று அழைக்க

ஆண்: எங்கெங்கே என்னென்ன இன்பங்கள் தோன்றும் என்று துடிக்க

பெண்: அங்கில்லை இங்கேதான் வாவென்று ஏதோ ஒன்று அழைக்க

ஆண்: நீ எடுக்க நான் கொடுக்க

பெண்: நாம் எடுத்துக் கொடுத்த பின் அடுத்தது நடக்க

பெண்: மயங்கி விட்டேன்… மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு வழங்கி விட்டேன் என்னை இன்று

ஆண்: மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை சொல்லச் சொல்ல என்ன சுகமோ

பெண்: எண்ணிக் கொள்
ஆண்: ஆஹா
பெண்: ஏந்திக் கொள்
ஆண்: ஓஹ்ஹோ ஹோ
பெண்: கன்னத்தின் கிண்ணம் பொங்கி வழியாமல்

ஆண்: கட்டிக் கொள்
பெண்: ம்ம்ம்..
ஆண்: ஒட்டிக் கொள்
பெண்: ம்ம்ம்ம்
ஆண்: காற்று நம்மிடையில் நுழையாமல்

பெண்: எண்ணிக் கொள் ஏந்திக் கொள் கன்னத்தின் கிண்ணம் பொங்கி வழியாமல்

ஆண்: கட்டிக் கொள் ஒட்டிக் கொள் காற்று நம்மிடையில் நுழையாமல்

பெண்: நெய்யும் தறியினிலே

ஆண்: நூல் இழை போலே

இருவர்: நாம் இருவர் ஒருவராய் நெருங்கியதாலே மயங்கி விட்டோம்

ஆண்: மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு வழங்கி விட்டேன் என்னை இன்று

பெண்: வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில் பின்னப் பின்ன என்ன சுகமோ