Maragatha Maalai Song Lyrics

Movie: Takkar (2020)
Music: Nivas K. Prasanna
Lyricists: Uma Devi
Singers: Chinmayi, Vijay Yesudas and Pradeep

Added Date: Feb 11, 2022

ஆண்: மரகத மாலை நேரம் மமதைகள் மாய்ந்து வீழும் மகரந்த சேர்க்கை காதல்தானா

பெண்: இரவினில் தோற்ற தீயை பருகிட பார்க்கும் பார்வை வழிவது காதல் தீர்த்தம் தானா

ஆண்: வார்த்தைகள் தோற்க்குதே தீண்டலே தரு மொழி நீயா

பெண்: தூரங்கள் கேட்குதே காதலின் வழித்துணை நீயா

ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஓ..ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ..ஓஹோ எழுதிடவா…இதழ் வரியா
பெண்: இடைவெளிதான்.. பெண் உயிர் வலியா…ஆ…ஆ…ஆ…

ஆண்: நீர் கேட்டேன் மழையாக வான் கேட்டேன் நிலவாக நீ எந்தன் கனவாக தேடி வந்ததென்ன

பெண்: நான் கேட்ட வரமாக நீ வந்தாய் நிஜமாக நாம் என்றும் உறவாக காலம் சேர்த்ததென்ன

ஆண்: ஒரு வானம் உடைந்து இரு வானம் வருமா ஒளி தூங்கும் இரவில் பூக்கள் பூப்பதென்ன

பெண்: மழை யாவும் வடிந்தும் மரதூறல் வருமே ஒரு யாமம் முடிந்தும் ஊடல் தோற்பதென்ன

ஆண்: நதி நீயா துளி நானா
பெண்: கலந்திங்கே காதல் ஆகுதே

ஆண்: எழுதிடவா…ஆ…ஆ…ஆ…ஆ..ஆ…
பெண்: இதழ் வரியா இடைவெளிதான்..
ஆண்: பெண் உயிர் வலியா…ஆ…ஆ…ஆ…