Idho Thaanagave Song Lyrics

Movie: Adhe Kangal (2017)
Music: M. Ghibran
Lyricists: Uma Devi
Singers: Yazin Nizar and Clinton Cerejo

Added Date: Feb 11, 2022

ஆண்: இதோ தானாகவே ஏனோ நீயாகிறேன் விழி காணாமலே உன்னை போல் ஆகிறேன்

ஆண்: இலை வண்ணமாய் மின்னுதே என்னை செல்லமாய் கொல்லுதே காதல் காதல் தூண்டுதே பார்வை கண்கள் மீளுதே

ஆண்: ஆதவ பூவோ மாதவ பூவோ உறவா பகையா

ஆண்: காதல் எந்தன் விழிகள் ஆகி அழகே உன்னை பார்க்குதடி உன் வாசம் எந்தன் வழிகள் ஆகி அருகில் என்னை சேர்க்குதடி

ஆண்: அட காற்று என்னும் குதிரை ஏறி இதயம் மாயம் ஆகுதடி

ஆண்: அடி ஆசையில் உன்னை திருடி செல்ல களவும் நியாயம் ஆகுமடி

ஆண்: முற்றும் துறந்தவள் மோகம் தருபவள் நீ தானோ பெண்ணே

ஆண்: நெற்றி சுடரென நிலவை கோர்தவள் நீயானாய் தானடி

ஆண்: ஒற்றை பூவின் பிரம்மாண்ட காடாய் நீயானாய் பெண்ணே

ஆண்: அற்றை நாளில் அமுதம் வார்த்தவள் நீயோ தானடி

ஆண்: அருகினில் வருதே உயிரினை சுடுதே தோழி உன் நினைவடி

ஆண்: தனிமையை தொலைந்தேன் நிலவினில் தொலைந்தேன் நீயே உறவடி

ஆண்: காதல் எந்தன் விழிகள் ஆகி அழகே உன்னை பார்க்குதடி உன் வாசம் எந்தன் வழிகள் ஆகி அருகில் என்னை சேர்க்குதடி

ஆண்: அட காற்று என்னும் குதிரை ஏறி இதயம் மாயம் ஆகுதடி

ஆண்: அடி ஆசையில் உன்னை திருடி செல்ல களவும் நியாயம் ஆகுமடி

ஆண்: ஹே காதல் எந்தன் விழிகள் ஆகி அழகே உன்னை பார்க்குதடி உன் வாசம் எந்தன் வழிகள் ஆகி அருகில் என்னை சேர்க்குதடி