Lyricist Vairamuthu

காதல் கணவா பாடல் வரிகள்

காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது

வாழை மரம் போல என்னை வாரி வழங்குவேன்
ஏழை கண்ட புதையல் போல ரகசியம் காப்பேன்

கணவன் என்ற சொல்லின் அர்த்தம் கண் அவன் என்பேன்
உனது உலகை எனது கண்ணில் பார்த்திட செய்வேன்

மழை நாளில் உன் மார்பில் கம்பளி ஆவேன்
மாலை காற்றை தலை கோதி நித்திரை தருவேன்

காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

உனது உயிரை எனது வயிற்றில் ஊற்றி கொள்வேன்
உனது வீரம் எனது சாரம் பிள்ளைக்கு தருவேன்

கால மாற்றம் நேரும் போது கவனம் கொள்வேன்
கட்டில் அறையில் சமையல் அறையில் புதுமை செய்வேன்

அழகு பெண்கள் பழகினாலும் ஐயம் கொள்ளேன்
உன் ஆண்மை நிறையும் போது உந்தன் தாய் போல் இருப்பேன்

உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள என்னுயிர் தருவேன்….

காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது

தூய்மையான என் சத்தியம் புனிதமானது
தூய்மையான என் சத்தியம் புனிதமானது…

Movie: Kochadaiiyaan
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman