Mainaave Mainaave Song Lyrics in Tamil

Lyricist Vairamuthu

மைனாவே மைனாவே பாடல் வரிகள்

மைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம்
கேட்கும் பாடல் நீதானா ஹே
மைனாவே மைனாவே என் கண்கள் பூமியில் தேடிய தேடல் நீதானா
விண்மீனாய் தொலைந்த மகள் வென் நிலவாய் வந்தாளா

தேடியவன் கைகளிலே தேவதையாய் விழுந்தாளா
பிரிவுக்கும் சேர்த்து இனிமேல் வாழ்வோம் வாழ்வோம் என்றாளா

மைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம்
கேட்கும் பாடல் நீதானா..
மைனாவே மைனாவே என் கண்கள் பூமியில் தேடிய தேடல் நீதானா

நீ போன காலம் தொட்டு என் வாழ்வில் பகலே இல்லை 
இருளோடு உன்னை தேடி இளைத்து விட்டேன்

திசைக்கொன்றாய் தேடி செல்ல விழி நான்கு இல்லை என்று 
கண்ணீரை சிந்தி சிந்தி கரைந்து விட்டேன்

பிரிந்தோம் அன்று துளியாக இணைந்தோம் இன்று நதியாக
நீரின் தாகம் நீரால் தீர்ந்தது ஆஆ ஆஆ 

மைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம் 
கேட்கும் பாடல் நீதானா
மைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம்
கேட்கும் பாடல் நீதானா

சில்லென்ற முத்தம் ஒன்று செல் எல்லாம் நனையும் போது 
உள்ளுக்குள் அச்ச பூக்கள் உதிர்கின்றதே

தேரோடு பூவனம் ஒன்று வாரோடு சரியும் போது 
அணுவெல்லாம் ஆகாயம் போல் பிரிகின்றதே

தேகம் ரெண்டும் பிரியாதா ஜீவன் எரியும் சுடராக..
முத்தம் என்னும் எண்ணெய் ஊற்றுவோம் ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

மைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம்
கேட்கும் பாடல் நீதானா ஆஆ ஆஆ 
மைனாவே மைனாவே என் கண்கள் பூமியில்
தேடிய தேடல் நீதானா..

விண்மீனாய் தொலைந்த மகள் வென் நிலவாய் வந்தாளா
தேடியவன் கைகளிலே தேவதையாய் விழுந்தாளா 
பிரிவுக்கும் சேர்த்து இனிமேல் வாழ்வோம் வாழ்வோம் என்றாளா…

Movie: Thithikudhe
Lyrics: Vairamuthu
Music: Vidyasagar

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.