Chakkalathi cover

Movie: Chakkalathi (1980)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Sailaja and B. S. Sasirekha

Added Date: Feb 11, 2022

பெண்: பௌ பௌ பௌ பௌ பௌ பௌ

பெண்: பிடி பிடி பிடி பிடி பிடி பிடி

பெண்: அடி அடி அடி அடி அடி அடி

பெண்: பிடி பிடி பிடி கோழி நீ பிடி

பெண்: அடி அடி அடி தலையில நீ அடி

பெண்: கோழி முட்டக் கோழி அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி..

இருவர்: கோழி முட்டக் கோழி அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி..

பெண்: பிரியாணி செஞ்சு வைக்க ஆச ரொம்ப இருக்கு தாமரங்கா ஈரலுன்னா அவுகளுக்கு கிறுக்கு

இருவர்: கோழி முட்டக் கோழி அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி..

பெண்: எலும்பெல்லாம் தட்டிப் போடடி தக்காளி சேர்த்து சூப்பு வச்சு எறக்கி வையடி குருமாவும் செஞ்சு வையடி உன் ராசா வந்தா கொத்துக்கறி சமைச்சு வையடி

பெண்: ஆட்டுக்கறி அஞ்சு வகை ஆங் கூட்டுக்கறி பத்து வகை

பெண்: முந்திரி கொட்டை புஷ்டிக்கு முட்டை பாலுடன் கிட்ட பருப்புமிருக்கு பச்சடி கிச்சடி பாயாசம் அப்பளம் மாம்பழம் மாதுளம் வச்சிருக்கேன்டி..

இருவர்: கோழி முட்டக் கோழி அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி.. பிரியாணி செஞ்சு வைக்க ஆச ரொம்ப இருக்கு தாமரங்கா ஈரலுன்னா அவுகளுக்கு கிறுக்கு

இருவர்: கோழி முட்டக் கோழி அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி..

பெண்: அரவண்டி சத்தம் கேட்குது மணி மாட்டு சத்தம் மேற்கு பக்கம் மெல்ல கேட்குது வெரசாக வேலை செய்யடி.. உன் ஆத்தா கிட்ட வாழையிலை வாங்கி வையடி

பெண்: பதறாதடி பறக்காதடி பூச்சூடடி பாய் போடடி அக்கரை சீமை போனவர் இப்போ இக்கரை வந்து சேருவதாலே மோகமும் தாகமும் ஆசையும் வேகமும் வாலிப வயசுல வருவதுதாண்டி ….