Lyricist Mu. Metha

கற்பூர பொம்மை ஒன்று பாடல் வரிகள்

ஹ்ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்
கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று

கலந்தாட கை கோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்

மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று

தாய் அன்பிற்கு ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது

என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று

கலந்தாட கை கோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று…

Movie: Keladi Kannmanii
Lyrics: Mu. Metha
Music: Ilaiyaraaja