Meni Kodhikkuthadi Song Lyrics

Movie: Thendral Varum Theru (1994)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: மேனி கொதிக்குதடி. மின்னல் துடிக்கையிலே. வானம் சிரிப்பதென்ன உந்தன் வாழ்க்கை அழுவதென்ன உள்ளம் இங்கே நோகிறது உலகம் எங்கே போகிறது..ஊ..

ஆண்: மேனி கொதிக்குதடி.

ஆண்: உதிர்ந்த உதிரிப் பூவா பெண் உலர்ந்து காய்ந்த கனியா எருகில் எரிந்த இலையா பெண் உருகும் மெழுகு திரியா

ஆண்: நிலவே ஒளியே கேள் அவர் கதைகளையே கடலே அலையே கேள் அவர் நிலைகளையே

ஆண்: கேட்டால் பொறுக்காதே அதை கேட்டே வெறுக்காதே கேட்டால் பொறுக்காதே அதை கேட்டே வெறுக்காதே

ஆண்: உதிர்ந்த உதிரிப் பூவா பெண் உலர்ந்து காய்ந்த கனியா உதிர்ந்த உதிரிப் பூவா..

ஆண்: மனிதர் வாழ்வை மனிதர் பறிக்கும் வழக்கம் இங்கேதான் மனது நோக மகிழ்ந்து ரசிக்கும் வாழ்க்கை இங்கேதான்

ஆண்: கவிதை கோடி எனக்குத் தந்த கண்ணில் கண்ணீரா பேதை செய்த குற்றம் என்ன கண்ணில் கண்டீரா

ஆண்: பாவம் செய்யாதவன் அவள் மேல் கல் வீசலாம் துரோகம் செய்யாதவன் தூய்மைதனை பேசலாம் மனிதா..ஆ. மனிதா….ஆ…

ஆண்: உதிர்ந்த உதிரிப் பூவா பெண் உலர்ந்து காய்ந்த கனியா உதிர்ந்த உதிரிப் பூவா..

ஆண்: சலவை செய்யும் மனிதன் நாவில் சீதை அழுக்கானாள் தலையை ஆட்டும் மனிதர் சதியால் பேதை வழக்கானாள்

ஆண்: நெருப்பின் மேலே நடக்கச் சொல்லும் ராமாயணம்தானே நிதமும் நிதமும் நடக்குதிங்கே ஆமாம் நிஜம்தானே

ஆண்: கவிதை தந்த பைங்கிளி கண்ணீர் சிந்தி வாடவோ காலம் என்னும் வாசலில் தீயோர் ஆட்டம் போடவோ மனிதா..ஆ. மனிதா….ஆ…