Alaipayuthey cover

Movie: Alaipayuthey (2000)
Music: A.R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Swarna Latha

Added Date: Feb 11, 2022

பெண்: எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் தவம்போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

பெண்: எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் தவம்போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

பெண்: கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பது எவனோ அறியவில்லை காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புாியவில்லை

பெண்: எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

பெண்: புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி

பெண்: உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சாிபாதி

பெண்: கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன் இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்

பெண்: எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

பெண்: உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள்மனதில் ஒரு மாறுதலா உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள்மனதில் ஒரு மாறுதலா

பெண்: இரக்கம் இல்லா இரவுகளில் இது எவனோ அனுப்பும் ஆறுதலா

பெண்: எந்தன் சோகம் தீா்வதற்கு இதுபோல் மருந்து பிறிதில்லையே

பெண்: அந்தக் குழலை போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே

பெண்: எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்