Lyricist Mu. Metha

சிட்டு பறக்குது பாடல் வரிகள்

சிட்டு பறக்குது குத்தாலத்தில் கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி
யாருமில்ல ஒரு வட்டாரத்தில் நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ

ஒரு மொட்டு மலருது ரோசா இங்கு முத்து குளிப்பது ராசா
மனம் பித்து பிடிக்குது ஆத்தி ஆத்தி ஆத்தி

வெள்ளி கொலுசொலி கேட்டால் விழிகள் தேடும் மனம் விரும்பி பாடும்
தங்க மணி குரல் கேட்டால் தவழ்ந்து ஆடும் பொங்கி மனம் ததும்பி ஓடும்

சின்ன சின்ன நெஞ்சில் வந்த கனவுகள் என்னை மயக்குது ஏனோ
வண்ண வண்ணக்கிளி உன்னை சுற்றி சுற்றி வட்டமடித்திட தானோ

ஆ தொட்டு தொட்டு விளையாடும் காற்று
தொட்டில் கட்டி தாலாட்டு பாடும்

ஒரு சித்திரை பெண்ணுக்கு மாலை வரும் சித்திரையில் ஒரு ஓலை
சிட்டு பறக்குது குத்தாலத்தில் கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி
யாருமில்ல ஒரு வட்டாரத்தில் நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ

ஒரு மொட்டு மலருது ரோசா இங்கு முத்து குளிப்பது ராசா
மனம் பித்து பிடிக்குது ஆத்தி ஆத்தி ஆத்தி

மஞ்சள் அரைக்குது வானம் எனக்கு தானே தினம் எனக்கு தானே
நெஞ்சை இழுக்குது ராகம் உனக்கு நானே இனி இங்கு உனக்கு நானே

இடை அசையுது இசை பிறக்குது கொடி பறக்குது மேலே
மணி முடிகளும் மலை சிகரமும் மலர் அடிகளின் கீழே

ஆ முத்து முத்து நீர் தூவும் மேகம் சுற்றி வந்து பூ தூவி போகும்
புது இரத்தின கம்பளம் போடு முத்து முத்து தமிழிசை பாடு

சிட்டு பறக்குது குத்தாலத்தில் கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி
யாருமில்ல ஒரு வட்டாரத்தில் நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ

ஒரு மொட்டு மலருது ரோசா இங்கு முத்து குளிப்பது ராசா
மனம் பித்து பிடிக்குது ஆத்தி ஆத்தி ஆத்தி

சிட்டு பறக்குது குத்தாலத்தில் கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி
யாருமில்ல ஒரு வட்டாரத்தில் நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ…

Movie: Nilave Mugam Kaattu
Lyrics: M. Mehta
Music: Ilaiyaraaja