Lyricist Yugabharathi

சித்திரையில் என்ன வரும் பாடல் வரிகள்

சித்திரையில் என்ன வரும் வெயில் சிந்துவதால் வெக்க வரும்
நித்திரையில் என்ன வரும் கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்

கண்ணான கண்ணுக்குள்ளே காதல் வந்தால் உண்மையில் என்ன வரும்
தேசங்கள் அத்தனையும் வென்றுவிட்ட தித்திப்பு நெஞ்சில் வரும்

பாவிப் பயனால இப்போ நானும் படும் பாடு என்ன
ஆவிப் புகைபோலே தொட்டிடாம இவ போவதென்ன

கண்ணுக்கு காவலா சொப்பனத்த போடற
கன்னத்துக்கு பவுடரா முத்தங்களப் பூசுற

நூலப் போல சீல பெத்தத் தாயப் போல காள
யாரு போல காதல் சொல்ல யாருமே இல்ல

சித்திரையில் என்ன வரும் வெயில் சிந்துவதால் வெக்க வரும்
நித்திரையில் என்ன வரும் கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்

கேணிக் கயிறாக உங்க பார்வ என்ன மேலிழுக்க
கூனி முதுகாக செல்ல வார்த்த வந்து கீழிழுக்க

மாவிளக்கு போல நீ மனசையும் கொளுத்துற
நா இடுக்கு ஓரமா நாணத்தப் பதுக்குற

யாரும் இறைச்சிடாத ஒரு ஊத்து போலத் தேங்கி
ஆகிப் போச்சு வாரம் இவ கண்ணு முழி தூங்கி

சித்திரையில் என்ன வரும் வெயில் சிந்துவதால் வெக்க வரும்
நித்திரையில் என்ன வரும் கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்

கண்ணான கண்ணுக்குள்ளே காதல் வந்தால் உண்மையில் என்ன வரும்
தேசங்கள் அத்தனையும் வென்றுவிட்ட தித்திப்பு நெஞ்சில் வரும்

சித்திரையில் என்ன வரும் வெயில் சிந்துவதால் வெக்க வரும்
நித்திரையில் என்ன வரும் கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்…

Movie: Sivappathigaram
Lyrics: Yugabharathi
Music: Vidyasagar