Lyricist Yugabharathi

நெலா வட்டம் நெத்தியிலே பாடல் வரிகள்

நெலா வட்டம் நெத்தியிலே நெஞ்சுக் குழி மத்தியில
ஒரே ஒரு முத்தம் வையேன் கோசல
அந்த முத்தத்துக்கு ஈடா தாரேன் காதல

கெடா வெட்டி பொங்கையிலே கேப்பக் கூழு கிண்டையில
ஒரே ஒரு முத்தம் வச்சா போதல
அந்த முத்தத்துக்கு ஈடு இல்ல ஊருல
நெலா வட்டம் நெஞ்சுக் குழி

தானே தந்தானே தந்தானேனே தந்தானானேனா
தானே தானா தந்தானேனே
தானே தனதனனே தந்தானேனே தா

கொல்லைய கூட்ட பழகுனேன் கூட்டத்த கூட்ட பழகுனேன்
உங்கள கூட்ட பழகலையே முன்னாடி
நீங்க கொல்லைய கூட்ட வருவீகளோ பின்னாடி

வெத்தல மடிக்க பழகுனேன் வேட்டிய மடிக்க பழகுனேன்
மறந்திட பழகலையே முன்னாடி
நீ புடவ மடிக்க கிளம்புறியே என்னடி
நீ புடவ மடிக்க கிளம்புறியே என்னடி

நெலா வட்டம் நெத்தியிலே நெஞ்சுக் குழி மத்தியில
ஒரே ஒரு முத்தம் வச்சா போதல அந்த முத்தத்துக்கு ஈடு இல்ல ஊருல
நெலா வட்டம்.. நெஞ்சுக் குழி..

ஏ… ஏ… ஏ… ஓ ஏலே ஏலே னானே ஏலே ஏலே னானே
ஏலே ஏலே னானே ஏலே ஏலே

ஓ ஏலேலா தந்தானே தந்தானே தந்தானே தந்தானே ஏலேலா
ஓ ஏலேலா தந்தானே தந்தானே தந்தானே தந்தானே ஏலேலா

ஓ ஏலேலா தந்தானே ஏலேலா தந்தானே
தந்தானே ஏலா தந்தானே ஏலா தந்தானே ஏலேலா

வெங்காயம் நறுக்க பழகுனேன் வெள்ளரி நறுக்க பழகுனேன்
உங்கள நறுக்க பழகலையே முன்னாடி
நீங்க ஒடம்ப நறுக்க வருவதென்ன அப்பாடி

கட்டில் வாங்க பழகுனேன் மெத்தைய வாங்க பழகுனேன்
உறங்கிட பழகலையே முன்னாடி
நீ உசுர வாங்கி தொலைக்கிறியே யம்மாடி
நீ உசுர வாங்கி தொலைக்கிறியே யம்மாடி

நெலா வட்டம் நெத்தியிலே நெஞ்சுக் குழி மத்தியில
ஒரே ஒரு முத்தம் வையேன் கோசல
அந்த முத்தத்துக்கு ஈடா தாரேன் காதல

கெடா வெட்டி பொங்கையிலே கேப்பக் கூழு கிண்டையில
ஒரே ஒரு முத்தம் தந்த போதல
அந்த முத்தத்துக்கு ஈடு இல்ல ஊருல
அந்த முத்தத்துக்கு ஈடு இல்ல ஊருல

தா தந்தா னனா னனானானா னானனா
தான தந்தா தந்தா னனானானா னானனா…

Movie: Desingu Raja
Lyrics: Yugabharathi
Music: D. Imman