Lyricist Vaali

சின்னத் தாயவள் பாடல் வரிகள்

சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ

தாயழுதாளே நீ வர நீ அழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் தான் நெஞ்சில் வாங்கிட
மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட விழி மூடாதோ

சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

பால் மணம் வீசும் பூமுகம் பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
ஆயிரம் காலம் ஊர்வலம் வேண்டிட வந்த பூச்சரம்
வெய்யில் வீதியில் வாடக் கூடுமோ
தெய்வக் கோயிலை சென்று சேருமோ எந்தன் தேனாறே

சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…

Movie: Thalapathi
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja