Lyricist Vaali

அப்பனென்றும் அம்மையென்றும் பாடல் வரிகள்

ஓஓஓஓஹோ ஓஓஓஓஹோ ஓஓஓ
ஓஓஓஓஹோ ஓஓஓஓஹோ ஓஓஓ

அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும்
கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு

அது புத்தன் என்றும் சித்தன் என்றும் பித்தன் என்றும்
ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு
ஞானப் பெண்ணே சக்கையாக போகும் கரும்பு

பந்த பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்

அப்பனென்றும் அப்பனென்றும் அம்மையென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு

குத்தம் குறை ஏதும் அற்ற ஜீவன் இங்கு யாரடா
சுத்தம் என்று யாரும் இல்லை பாவ மூட்டை தானடா
சிவனைக் கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா
புத்தி கெட்ட மூடர்கென்றும் ஞானப் பார்வை ஏதடா

ஆதி முதல் அந்தம் உன் சொந்தம் உன் பந்தம் நீ உள்ளவரை தான்
வந்து வந்து கூடும் கூத்தாடும் விட்டோடும் ஓர் சந்தை கடை தான்
இதில் நீ என்ன நான் என்ன வந்தாலும் சென்றாலும் என்னாச்சு விட்டுத் தள்ளு

அப்பனென்றும் அப்பனென்றும் அம்மையென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு

கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்
ஆடித்தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரனும்
ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடா
ஆட நானும் மாட்டேன் என்று ஓடிப்போனதாரடா
தட்டு கெட்டு ஓடும் தள்ளாடும்

எந்நாளும் உன் உள்ளக் குரங்கு கட்டுப்படக் கூடும்எப்போதும்
நீ போடு மெய்ஞான விலங்கு
மனம் ஆடாமல் வாடாமல் மெய்ஞானம்
உண்டாக அஞ்ஞானம் அற்று விழும்

அப்பனென்றும் அப்பனென்றும் அம்மையென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு

அது புத்தன் என்றும் சித்தன் என்றும் பித்தன் என்றும்
ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு
ஞானப் பெண்ணே சக்கையாக போகும் கரும்பு

பந்த பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்

அப்பனென்றும் அப்பனென்றும் அம்மையென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு

அது புத்தன் என்றும் சித்தன் என்றும் பித்தன் என்றும்
ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு
ஞானப் பெண்ணே சக்கையாக போகும் கரும்பு…

Movie: Guna
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja