Aalukkoru Veedu cover

Movie: Aalukkoru Veedu (1960)
Music: Viswanathan – Ramamoorthy
Lyricists: Pattukkottai Kalyanasundram
Singers: P. B. Srinivas and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா

பெண்: அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா

பெண்: மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ

ஆண்: உறவானது மனதில்
பெண்: ஆஹா ஹா
ஆண்: மணமானது நினைவில்
பெண்: ஓஹோ ஹோ..

ஆண்: இதை மாற்றுவதால் மானே வையகம் மீதில் உறவானது மனதில் மணமானது நினைவில் இதை மாற்றுவதால் மானே வையகம் மீதில் இருவர்: ல்ல்லலல்

பெண்: அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா இருவர்: ஆஅ..ஆ…ஆஅ…ஆஆ…ஆ..

ஆண்: காதலுக்கே உலகம் என்று கனவு கண்டேனே
பெண்: நான் கனவில் கண்ட காட்சி எல்லாம் கண்ணில் கண்டேனே

ஆண்: காதலுக்கே உலகம் என்று கனவு கண்டேனே
பெண்: நான் கனவில் கண்ட காட்சி எல்லாம் கண்ணில் கண்டேனே

ஆண்: இது காவிய கனவு
பெண்: இல்லை காரிய கனவு
ஆண்: புது வாழ்வினிலே தோன்றும் மங்கலக் கனவு

ஆண்: இது காவிய கனவு
பெண்: இல்லை காரிய கனவு இருவர்: புது வாழ்வினிலே தோன்றும் மங்கலக் கனவு..ஊ..

இருவர்: அன்பு மனம் துணிந்து விட்டால் அச்சம் தோணுமா ஆவலை வெளியிட வெகு நேரம் வேணுமா இரு குரல் கலந்து விட்டால் இன்ப கீதமே இன்னமுத வீணையும் அறியாத நாதமே..ஏ…