Movie: Aalukkoru Aasai (1977)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S. Janaki
Added Date: Feb 11, 2022
பெண்: வாழ்வென்னும் சொர்க்கத்தில் உந்தன் பக்கத்தில் நான் வரவேண்டும் சுகம் பெற வேண்டும் அந்த வரம் வேண்டும் ம்ம்ம்ம் …
குழு: ஜின் ஜின் ஜணாக்கு ஜணாக்கு ஜணாக்கு ஜின் ஜின் ஜணாக்கு ஜணாக்கு ஜணாக்கு ஜின் ஜின் ஜணாக்கு
குழு: வாழ்வென்னும் சொர்க்கத்தில் உந்தன் பக்கத்தில் இவள் வரவேண்டும் சுகம் பெற வேண்டும் வரம் தர வேண்டும்.
பெண்: ம்ம்ம்ம்
பெண்: இயற்கை அழகு இளமை விருந்து படைக்கும் வயதல்லவோ.. இங்கு ரசிக்க தடை என்னவோ
குழு: இவள் உன்னை நினைத்து தன்னை மறந்து நெஞ்சில் வளர்ந்து எண்ணம் தவித்து எங்கோ பறக்கிறாள்
பெண்: வயதில் அரும்பும் வசந்த சுகங்கள் வாழ்வை வளர்கின்றது நினைத்தால் யாவும் இனிக்கின்றது.
பெண்: விடைத்தேடி பார்த்தாலும் கிடைக்காதது
குழு: இள நெஞ்சின் கணக்கு நெஞ்சின் கணக்கு என்றும் இனிக்குது
பெண்: வாழ்வென்னும் சொர்க்கத்தில் உந்தன் பக்கத்தில் நான் வரவேண்டும் சுகம் பெற வேண்டும் அந்த வரம் வேண்டும்
பெண் மற்றும்
குழு: …….
பெண்: இதயம் எழுதும் கவிதை முழுதும் காதல் கதைகளடி இளமை மலர்கள் மலருமடி
குழு: இது மாலை மயக்கம் காலை உறக்கம் ஆளை மயக்கும் ஊரே மயங்கும் வேளை பிறந்ததே
பெண்: வாடை குளிரும் வாடும் உடலும் என்னை வாட்டுதடி மன்னன் நினைவை ஊட்டுதடி
பெண்: தடைப்போட முடியாத கதைதானடி
குழு: இள நெஞ்சின் கணக்கு நெஞ்சின் கணக்கு என்றும் இனிக்குது
பெண்: வாழ்வென்னும் சொர்க்கத்தில் உந்தன் பக்கத்தில் நான் வரவேண்டும் சுகம் பெற வேண்டும் அந்த வரம் வேண்டும் ம்ம்ம்…
குழு: {ஜின் ஜின் ஜணாக்கு ஜணாக்கு ஜணாக்கு ஜின் ஜின் ஜணாக்கு ஜணாக்கு ஜணாக்கு ஜின் ஜின் ஜணாக்கு} (2)