Karuppu Nila Song Lyrics in Tamil - கருப்பு நிலா

Karuppu Nila Song Lyrics in Tamil

Lyricist Vaali

கருப்பு நிலா கருப்பு நிலா
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்
கருப்பு நில நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர் விழுவது  ஏன்

சின்ன மானே மாங்குயிலே உன் மனசுல என்ன குறை
பெத்த ஆத்தாபோல் இருப்பேன் இந்த பூமியில் வாழும் வர
எட்டு திசை யாவும் கட்டி அரசாள வந்த ராசா நீதானே

கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்

பத்து மாசம்மடியேந்தி பெத்தெடுத்த மகராசி 
பச்ச புள்ள உன்ன விட்டு போனதென்னி அழுதாயா

மாமன் வந்து என்னை காக்க நானும் வந்து உன்னை தாக்க
நாம் விரும்பும் இன்பம் எல்லாம் நாளை வரும் நமக்காக

காலம் உள்ள காலம் வாழும் இந்த பாசம் 
பூ விழி இமை மூடியே சின்ன பூவே கண்ணுறங்கு

கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்

வண்ண வண்ண முகம் காட்டி வானவில்லின் நிறம் காட்டி 
சின்ன சின்ன மழலை பேசி சித்திரம் போல் மகனே வா

செம்பருத்தி மலர் போலே சொக்க வெள்ளி மணி போலே 
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன கண்மணியே மடிமேல் வா

பாட்டு தமிழ் பாட்டு பாட அத கேட்ட 
ஆடிடும் விளையாடிடும் தங்க தேரே நீதானே

கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்

ஏ மானே மாங்குயிலே உன் மனசு என்ன குறை
பெத்த ஆத்தா போல் இருப்பேன் இந்த பூமியில் வாழும் வர
எட்டு திசை யாவும் கட்டி அரசாள வந்த ராசா நீதானே

கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்...

Movie: En Aasai Machan
Lyrics: Vaali
Music: Deva

Post a Comment

0 Comments