singer lata mangeshkar images

பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை வரலாறு

Name Lata Mangeshkar
Born Name Hema Mangeshkar
Other Name Queen of Melody

Nightingale of India

Born September 28, 1929
Died February 6, 2022 (aged 92)
Occupation Playback Singer Occasional Music, Composer, Producer
Parents Name Deenanath Mangeshkar (Father)

Shevanti Mangeshkar (Mother)

Marital status Single

‘லதா மங்கேஷ்கரின்’ குரல் உலக அளவில் இந்தியாவின் குரலாய் ஒலித்திருக்கிறது. கடந்த நூற்றாண்டின் சிறந்த நூறு பேர்களில் ஒருவர் என்ற பெருமையை வாழும் காலத்திலேயே பெற்றவர் அவர்.

singer lata mangeshkar images

லதா மங்கேஷ்கர் இந்தியாவின் புகழ் பெற்ற ஒரு பாடகியும், மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். மேலும் இந்தியாவில் பாலிவுட் பின்னணிப் பாடகியாகப் புகழ் பெற்று விளங்கும் ஆஷா போஸ்லே அவர்களின் சகோதரி ஆவார். சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளர். இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படுபவர்.

இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவர் ஒருவராவார். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்தது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

singer lata mangeshkar images

Singer Lata Mangeshkar Childhood Days in Tamil

இந்தியாவின் ‘இசைக் குயில்’ என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் அவர்கள், செப்டம்பர் 28, 1929 ஆம் ஆண்டு இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள “இந்தூர்” என்ற இடத்தில் பண்டிட் தீனநாத் மங்கேஷ்கருக்கும், செவந்திக்கும் மகளாக ஒரு “கோமன்டக் மராட்டிய” குடும்பத்தில் பிறந்தார்.

singer lata mangeshkar images

உடன் பிறந்தவர்கள் ஆஷா, உஷா, ஹ்ருதய் நாத், மீனா ஆகியோர். கோவா வில் மங்கேஷி என்னும் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். லதாவின் தந்தை ஒரு பாடகர். மேடையில் பாடுவதோடு சோசியமும் பார்த்து வந்தார்.

Singer Lata Mangeshkar Early Life in Tamil

லதா சிறு வயதிலேயே மிகவும் சுறுசுறுப்பாய் திகழ்ந்தார். ஓவியம் தீட்டுவது, பல குரல் செய்கை (Mimicry) இவற்றில் திறமை இருந்தது. எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் திறன் படைத்த லதா தமது வாழ்வின் அடி நாளிலிருந்தே இசையில் மட்டற்ற ஆர்வம் கொண்டவர்.

அவருடைய ஆர்வத்தையும், திறமையையும் அடையாளம் கண்டு கொண்ட தந்தையார் அவருக்கு இசைப் பயிற்சி அளித்தார். லதா மங்கேஷ்கரின் தந்தை ஒரு கிளாசிக்கல் பாடகர் மற்றம் நாடக கலைஞராகவும் இருந்தார். இதனால் தன்னுடைய ஐந்து வயதிலேயே தந்தையிடம் இசைப் பயிலத் தொடங்கினார். லதாவிற்கு பிறப்பிலேயே ஞானம் இருந்தபடியால் குறுகிய காலத்துக்குள் கர்நாடக இசையைக் கற்றுத் தேர்ந்தார்.

singer lata mangeshkar images

பிறகு, புகழ் பெற்ற அமான் அலி கான் சாகிப் மற்றும் அமநாத் கான் ஆகியோரின் கீழ் இசைப்பயிற்சி மேற்கொண்டார். ஒன்பது வயதிலேயே அவருடைய அரங்கேற்றம் நடந்தது. 1934-ல் வெளிவந்த முதல் பேசும் படமான ‘ஆலம் ஆரா’ நாடகங்களுக்கிருந்த வரவேற்பை மங்கச் செய்தது. தீனாநாத் போன்றவர்கள் வருமானமின்றி சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது.

Singer Lata Mangeshkar Entry in Cini Field in Tamil

முதன் முதலாக 1942 இல் ‘கிதி ஹசால்’ என்ற மராத்திப் பாடலைப் பாடினார். 1948 இல் இவர் பாடிய மஜ்பூர் என்ற திரைப்படம் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து வந்த படங்களான பர்சாத், அந்தாஸ், துலாரி, மகால் போன்ற படங்கள் இவருக்குப் பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தன.

singer lata mangeshkar images

இவரது பாடல்கள் அந்தக் காலத்தில் தொடங்கி இன்றுவரை தனித்துவமான கவர்ச்சியோடு பலரையும் கவர்ந்து கொண்டிருக்கின்றன.1942 ஆம் ஆண்டு சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், முதன் முதலாக “கிதி ஹசால்” என்ற மராத்தி பாடலைப் பாடினார். அதே ஆண்டில் அவருடைய தந்தையும் இறந்து விடவே, குடும்பம் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளானது.

singer lata mangeshkar images

அந்த நேரத்தில் இசையமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர் “மஜ்பூர்” என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு அளித்தார். இது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம். இதனை தொடர்ந்து வந்த ‘மகால்’, ‘அந்தாஸ்’, ‘பர்சாத்’, ‘துலாரி’ போன்ற படங்கள் இவருக்கு பெரும் புகழை ஈட்டிக்கொடுத்தது.

லதா கடுமையாக உழைத்துப் பாடினார். பெரிய வெற்றிகளைப் பெற்ற போதும் லதா அடக்கமும், அமைதியும் உடையவராகவே காட்சியளித்தார். பூவினும் மெல்லிய குரல்! இரும்பினும் திடமான இதயம்!

Best Songs Sung by Lata Mangeshkar in her Career

லதா மங்கேஷ்கர் அவர்கள் பாடிய பல பாடல்கள் இன்றளவும் இந்திய ரசிகர்களால் கவரப்பட்டு வருகிறது. நௌஷாத் இசையில் ‘முகல் ஆஸம்’ (1960) என்ற திரைப்படத்தில்  “பியார் கியா டு டர்ணா கியா” என்ற பாடல்,  தில் அப்னா அவுர் ப்ரீத் பரய் (1960) என்ற திரைப்படத்தில் “அஜீப் தாஸ்டீன் ஹை யே” என்ற பாடல், வழிகாட்டி (1965) திரைப்படத்தில் “பியா டோசே” என்ற பாடல், ஜீவல் தீப் (1967) என்ற திரைப்படத்தில் “ஹோதொன் பே அஸி பாத்” என்ற பாடல், அன்பாத் (1962) திரைப்படத்தில் “ஆப் கி நழ்ரோன் நே சம்ஜா” என்ற பாடல், மாயா (1961), திரைப்படத்தில் “டாஸ்வீர் தேரி தில் மெய்ன்” என்ற பாடல், பிரேம் பூஜாரி (1970) திரைப்படத்தில் “ரங்கீலா ரெ” என்ற பாடல், ஷர்மீளா (1971) திரைப்படத்தில் “கஹில்டே ஹைன் குல் யாஹன்” என்ற பாடல், அபிமன் (1973) திரைப்படத்தில் “பியா பினா” போன்ற பாடல்கள் நாடுமுழுவதும் பெரும் புகழை பெற்றுத்தந்தது என கூறலாம்.

singer lata mangeshkar images

List of Songs Sung by Lata Mangeshkar in Tamil Movies

பாடல்

திரைப்படம்

எந்தன் கண்ணாளன் வான ரதம்
இங்கே பொன் வீணை   கண்ணுக்கொரு வண்ணக்கிளி
ஆராரோ ஆராரோ ஆனந்த்
வலையோசை சத்யா
இங்கேயும் சத்யா
எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் பாடுது

singer lata mangeshkar images

Singer Lata Mangeshkar Death

இந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றுக் காரணமாக, மும்பை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் லதா மங்கேஷ்கர், பிப்ரவரி 6, 2022 ஆம் நாள் சிகிச்சைப் பலனின்றி காலமானார். உலக அளவில் இந்தியாவின் குரலாய் ஒலிக்கச்செய்தவர்  லதா மங்கேஷ்கர்.

singer lata mangeshkar images

Singer Lata Mangeshkar Awards and Recognition

  • 1958 ஆம் ஆண்டு சலீம் சவுத்ரி இசையமைத்து வெளிவந்த “மதுமதி” என்ற திரைப்படத்தில், இவர் பாடிய “ஆஜா ரெ பரதேசி” என்ற பாடல், இவருக்கு முதல் ஃபிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது.
  • பிறகு, 1961-ல் ஹேமந்த் குமார் இசையமைத்த “பீஸ் சால் பாத்” திரைப்படத்தில் “கஹின் தீப் ஜலே கஹின் தில்” என்ற பாடல் இவருக்கு இரண்டாவது ஃபிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது.
  • 1973 ஆம் ஆண்டு, ஆர்.டி பர்மன் இசையமைத்து வெளிவந்த “பரிஜாய்” என்ற திரைப்படதில் இவர் பாடிய “பீதி நா பிட்டை” என்ற பாடல் சிறந்த பின்னணி பாடகருக்கான முதல் “தேசிய விருதை” பெற்றுத்தந்தது.
  • 1972 ஆம் ஆண்டு பீட்டி நா பிடாய் ரெய்னா (பரிஜாய்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
  • 1974 ஆம் ஆண்டு உலகளவில் அதிக பாடல்களை பாடியதற்காக “கின்னஸ் புத்தகத்தில்” இடம் பிடித்தார்.
  • 1975 ஆம் ஆண்டு ரூதே ரூதே பியா (கோரா காகஸ்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டு “தாதா சாஹேப் பால்கே விருது” வழங்கப்பட்டது.

singer lata mangeshkar images

  • 1990 ஆம் ஆண்டு யாரா சீலி சீலி (லேகின்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
  • 1993 ஆம் ஆண்டு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
  • 1996 ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
  • 1997 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி விருது இவருக்கு வழங்கப்பட்டது.
  • 1999 ஆம் ஆண்டு “பத்ம விபூஷன் விருது” வழங்கப்பட்டது.
  • 1999 ஆம் ஆண்டு என்.டி.ஆர் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளருக்கான ஜீ சினிமா விருது இவருக்கு வழங்கப்பட்டது.
  • 2000 ஆம் ஆண்டு லண்டனிலுள்ள ஐ.ஐ.எப்.ஏ மூலம் வாழ்நாள் சாதனையாளர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
  • 2001 ஆம் ஆண்டு ஹீரோ ஹோண்ட மற்றும் ஸ்டார்டஸ்ட் இதழ் மூலமாக சிறந்த பின்னனி பாடகருக்கான மில்லேனியம் விருது வழங்கப்பட்டது.
  • 2001 ஆம் ஆண்டு “நூர்ஜஹான் விருது” வழங்கப்பட்டது.
  • 2001 ஆம் ஆண்டு “மகாராஷ்டிரா ரத்னா விருது” வழங்கப்பட்டது.
  • 1999 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்  லதா மங்கேஷ்கர்.
  • 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்தனா விருது” மத்திய அரசால் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
  • 2001 ஆம் ஆண்டு மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையினை புனேவில் நிறுவினார்.

singer lata mangeshkar images

Singer Lata Mangeshkar Social Media Link

Note: Above Link are Fan Pages.

Reference: Wikipedia