actor arvind swamy images

நடிகர் அரவிந்த்சாமியின் வாழ்க்கை வரலாறு

Name Arvind Swamy
Born Name Arvind Swamy
Age 51 (June 18, 1970)
Occupation Actor, Director, Entrepreneur, Television Presenter, Model
Parents Name V. D. Swami (Father)

Vasantha Swami (Mother)

Spouse Name Gayathri Ramamurthy (1994 – 2010 divorce)​

Aparna Mukherjee ​(2012 Present)

Children Adhira Swamy (Daughter B. 1996)

Rudra Swamy (Son B. 2000)

actor arvind swamy images

அர்விந்த்சாமி ஓர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே போன்ற படங்கள் இவரது புகழ்பெற்ற திரைப்படங்கள் ஆகும்.

actor arvind swamy images

 

Actor Arvind Swamy Childhood Days in Tamil

நடிகர் அர்விந்த்சாமி சூன் 18, 1970 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமார் மற்றும் வசந்தா சுவாமி என்பவருக்கும் பிறந்தார். இவர் அவரது மாமாவிடம் வளர்ந்தார்.

actor arvind swamy images

Actor Arvind Swamy Early Life in Tamil

அர்விந்த்சாமி சென்னையில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியிலும் பின்னர் எழும்பூர் டான் பாஸ்கோவிலும் படித்தார். லயோலாக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப்பட்டம் பெற்றார். பின்னர் முதுகலைப் பட்டமேற்படிப்பை அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநில வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். அவரது தாயின் உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து இந்தியா திரும்பினார்.

actor arvind swamy images

Actor Arvind Swamy Marriage Life in Tamil

அர்விந்த்சாமி 1994 ஆம் ஆண்டு காயத்திரி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஆதிரை, ருத்ரா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபட்டால் 2010 ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது. அதன் பிறகு அபர்ணா முஃஹெர்ஜீ என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

actor arvind swamy images

Actor Arvind Swamy Entry in Cini Field in Tamil

அவரது திரைப்பட அறிமுகம் மணிரத்னத்தின் தளபதியில் தொடங்கியது. முதன்மை வேடமேற்று நடித்த முதல் படமாக மணிரத்னத்தின் ரோஜா படம் அமைந்தது. இந்தப் படம் மூலம் நாடெங்கிலும் அவருக்கு அறிமுகம் கிடைத்தது.

actor arvind swamy images

அவர் வேடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதால், வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.

actor arvind swamy images

இவர் நடித்த ரோஜா மற்றும் பம்பாய் திரைப்படம் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது. அதன் பிறகு ‘இந்திரா’, ‘மின்சார கனவு’, என் சுவாசக் காற்றே மற்றும் அலைபாயுதே போன்ற வெற்றி படங்களில் நடித்தார்.

actor arvind swamy images

2000ஆம் ஆண்டு முதல் நடிப்பதை விட்டு பிற வணிகச் செயல்களைக் கவனிக்கத் தொடங்கினார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தாலும் தனி ஒருவன் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அவர் ‘தனி ஒருவன்‘ படத்தில் வில்லன் கதாப்பாத்திரம் ஏற்று நடித்திருப்பார், வில்லனுக்கான இலக்கணமாய் வாழ்ந்திருப்பார்.

actor arvind swamy images

Actor Arvind Swamy Flim List in Tamil

ஆண்டு

திரைப்படம்

1991 தளபதி
1992 ரோஜா
1993 மறுபடியும்
1993 டாடி
1993 பாசமலர்கள்
1995 பம்பாய்
1995 மௌனம்
1995 இந்திரா
1996 தேவராகம்
1997 சாத் ரங் கே சப்னே
1997 மின்சார கனவு
1997 புதையல்
1999 என் சுவாசக் காற்றே
2000 அலைபாயுதே
2002 ராஜா கோ ராணி சே பியார் ஹோ கயா
2005 சாசனம்
2012 கடல்
2015 தனி ஒருவன்
2017 போகன்
2018 பாஸ்கர் ஒரு ராஸ்கல்
2018 செக்க சிவந்த வானம்
2021 தலைவி
2022 நரகாசூரன்
2022 கள்ளபார்ட்
2022 சதுரங்க வேட்டை 2
2022 வணங்காமுடி

actor arvind swamy images

Actor Arvind Swamy Awards and Recognition

தமிழக அரசு திரைப்பட விருதுகளான சிறந்த நடிகருக்கான விருது ‘ரோஜா‘ படத்துக்காக 1992 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது. சிறந்த துணைநடிகருக்கான பிலிம்பேர் விருது ‘தனி ஒருவன்’ படத்திற்காக 2016 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது. சிறந்த வில்லனுக்கான பிலிம்பேர் விருது 2016 ஆம் ஆண்டு ‘தனி ஒருவன்’ படத்துக்காக கொடுக்கப்பட்டது.

actor arvind swamy images

Actor Arvind Swamy  Social Media Link

Note: Above Link are Fan Pages.

Reference: Wikipedia