actor murali images

நடிகர் முரளியின் வாழ்க்கை வரலாறு

Name Murali
Born Name S. D. Murali
Age May 19, 1964
Died September 8, 2010 (aged 46)
Occupation Actor, Producer
Parents Name S. Siddalingaiah (Father)

S. Dhanalakshmi (Mother)

Spouse Name Shobha
Children Kavya (Daughter)

Atharvaa (Son)

Akash (Son)

முரளி தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 இல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.

actor murali images

1990-இல் வந்த “புது வசந்தம்”, 1991 இல் வந்த “இதயம்” படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. “கடல் பூக்கள்” என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார்.

Actor Murali Childhood Days in Tamil

நடிகர் முரளி பெங்களூரில் மே 19, 1964 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளரான சித்தலிங்கையா மற்றும் தமிழ் சமூகத்தை சேர்ந்த தனலெட்சுமி என்பவருக்கும் பிறந்தார். முரளியின் தந்தை சித்தலிங்கையா கன்னடர் ஆவார். அவர் பல படங்களை‌த் தயா‌ரித்துள்ளார்.

actor murali images

Actor Murali Early Life in Tamil

நடிகர் முரளி 5 ஆம் வகுப்பு வரை சென்னையில் படித்தார், பின்னர் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பெங்களூரில் படித்தார். அவருக்கு 14 வயதாக இருந்தபோது, அவர் தனது தந்தை, திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளர் எஸ்.சித்தலிங்கய்யாவிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். சில காலம், எடிட்டிங் உதவியாளராகப் பணியாற்றினார்.

actor murali images

Actor Murali Marriage Life in Tamil

முரளி 1987 ஆம் ஆண்டு ஷோபா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் காவ்யா (1988) என்ற ஒரு பெண் குழந்தை மற்றும் அதர்வா(1989), ஆகா‌ஷ்‌(1992) என்‌ற இரு மகன்களும் உள்ளனர். அதர்வா தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார்.

அதர்வா “பாணா காத்தாடி” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தில் முரளி சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார்.

actor murali images

Actor Murali Entry in Cini Field in Tamil

நடிகர் முரளி தனது முதல் கன்னட திரைப்படமான ‘பிரேம பர்வா’ 1984 ஆம் ஆண்டுஅவரது  20-ஆவது வயதில்  வெளியானது. பின்னர் தமிழ் மொழியில் ‘பூவிலங்கு’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

actor murali images

முரளி 90-களில் அனைவருக்கும் பிடித்தமான நடிகராக இருந்தார். 1990 இல் வந்த “புது வசந்தம்”, 1991 இல் வந்த “இதயம்” படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின்னர் ‘காலமெல்லாம் காதல் வாழ்க’, பொற்காலம்’, ‘காதலே நிம்மதி’, ‘கனவே கலையாதே’, ‘இரணியன்’, ‘வெற்றிக் கொடி கட்டு’ மற்றும் ‘சொன்னால் தான் காதலா’ போன்ற படங்கள் வெற்றிபெற்றது.

actor murali images

அண்ணன், தம்பி மற்றும் தங்கை என கூட்டுக்குடும்பமாக வாழும் சில திரைப்படமான ‘ஆனந்தம்’ மற்றும்  ‘சமுத்திரம்’ திரைப்படத்தில் ஒரு துணைநடிகராக அசத்தியிருப்பார்.

இவர் சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ், பிரபுதேவா, சூர்யா, பார்த்திபன், மம்மூட்டி, சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடனும் மீனா, சிம்ரன், ரோஜா, தேவயானி, லைலா, ரம்பா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகளுடனும் இணைந்து நடித்துள்ளார்.

actor murali images

முரளி தனது மகன் அதர்வாவின் அறிமுகப்படமான “பாணா காத்தாடி” என்ற திரைப்படத்தில் முரளி சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார். அதன் பின்னர் ‘கவசம்’ என்ற படத்தில் நடித்தார், அதுவே அவரின் இறுதி திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படம் இவரின் மறைவுக்கு பிறகு 2016 ஆம் ஆண்டு வெளியானது.

actor murali images

Actor Murali Important Film List in Tamil

ஆண்டு

திரைப்படம்

1984 பிரேம பர்வா
1984 பூவிலங்கு
1984 இங்கேயும் ஒரு கங்கை
1984 புதியவன்
1985 பகல் நிலவு
1985 கீதாஞ்சலி
1985 அந்தஸ்து
1986 புதிர்
1986 ஒரு மலரின் பயணம்
1986 காலமெல்லாம் உன் மடியில்
1987 வண்ணக்கனவுகள்
1987 மீண்டும் மகான்
1988 புயல் பாடும் பாட்டு
1988 குடும்பம் ஒரு கோவில்
1988 தப்புக்கணக்கு
1989 தங்கமணி ரங்கமணி
1989 கைவீசம்மா கைவீசு
1989 நினைவுச்சின்னம்
1990 புது வசந்தம்
1990 வெற்றிமாலை
1990 நாங்கள் புதியவர்கள்
1990 புதியக்காற்று
1990 நம்ம ஊரு பூவாத்தா
1991 சாமி போட்ட முடிச்சு
1991 இதயம்
1991 குறும்புக்காரன்
1991 இரவுச்சூரியன்
1992 தங்க மனசுக்காரன்
1991 சின்ன பசங்க நாங்க
1991 என்றும் அன்புடன்
1991 தாலி கட்டிய ராசா
1993 மணிக்குயில்
1993 தங்கக்கிளி
1994 மஞ்சுவிரட்டு
1994 அதர்மம்
1994 என் ஆசை மச்சான்
1994 சத்யவான்
1995 ஆகாயப் பூக்கள்
1995 தொண்டன்
1996 பூவே உனக்காக
1996 பூமணி
1997 காலமெல்லாம் காதல் வாழ்க
1997 பொற்காலம்
1997 ரோஜா மலரே
1998 காதலே நிம்மதி
1998 தினம்தோறும்
1998 வீரத்தாலாட்டு
1998 பூந்தோட்டம்
1998 என் ஆச ராசாவே
1998 உன்னுடன்
1998 தேசியகீதம்
1999 கனவே கலையாதே
1999 ஊட்டி
1999 பூவாசம்
1999 இரணியன்
2000 வெற்றிக் கொடி கட்டு
2000 மனுநீதி
2001 கண்ணுக்கு கண்ணாக
2001 சொன்னால் தான் காதலா
2001 ஆனந்தம்
2001 சமுத்திரம்
2001 அள்ளித்தந்த வானம்
2001 கடல் பூக்கள்
2002 சுந்தரா டிராவல்ஸ்
2002 காமராசு
2002 நம்ம வீட்டு கல்யாணம்
2003 காதலுடன்
2004 அறிவுமணி
2006 பாசக்கிளிகள்
2009 எங்கள் ராசி நல்ல ராசி
2009 நீ உன்னை அறிந்தால்
2010 பாணா காத்தாடி
2016 கவசம்

actor murali images

Actor Murali Death

இவர் 46 வது வயதில் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Actor Murali Awards and Recognition

2001 ஆம் ஆண்டு வெளிவந்த “கடல் பூக்கள்” என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார்.

actor murali images

Reference: Wikipedia