Aboorva Sakthi 369 cover

Movie: Aboorva Sakthi 369 (1991)
Music: Ilayaraja
Lyricists: Pavun Raj
Singers: S. P. Balasubrahmnayam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ராச லீலைக் காலம் காதல் யோகம் ஆகும் மௌனமே கீதமாய் தென்றலாக வீசும்

ஆண்: ராச லீலைக் காலம் காதல் யோகம் ஆகும்

பெண்: கல்விக்கூடம் போகையில் காதல் பாடம் நல்லதா கண்ணின் ஜாடை பேசுதல் தேவை இல்லை அல்லவா

ஆண்: காதல் இன்றி பாடமா படிப்பதென்ன வேதனை அந்தி நேரக் கல்விதான் தந்ததெந்தன் சாதனை

பெண்: தேனைப் போலப் பேசிக் கெடுத்த தீமையாகும் நண்பனே

ஆண்: மேனி கண்ட பருவ தாகம் மூடி மறைக்க முடியுமா

பெண்: உதய கீதம் பாடி என்னை மயக்க வேண்டாம் இதய ராஜ

பெண்: ராச லீலைக் காலம் காதல் யோகம் ஆகும் மௌனமே கீதமாய் தென்றலாக வீசும் ராச லீலைக் காலம் காதல் யோகம் ஆகும்

ஆண்: தூரல் போடும் நீர்த் துளி மாறன் வீசும் மலர்க் கணை மாலை நேர மயக்கமே உதட்டில் உந்தன் புன்னகை

பெண்: நேரம் காலம் பார்த்து நீ கொஞ்ச வேண்டும் என்னிடம் ஆசை மீறிப் போனதால் அஞ்சி நின்றேன் உன்னிடம்

ஆண்: கொட்டும் மழையில் நடுக்கம் நீங்க இடையை நானும் பிடிக்கவா

பெண்: இடையை மறந்து குடையைப் பிடித்தால் உந்தன் நடுக்கம் தீருமே

ஆண்: தழுவும் போது நழுவி ஓடும் எண்ணம் ஏனோ இதய ராணி

ஆண்: ராச லீலைக் காலம் காதல் யோகம் ஆகும் மௌனமே கீதமாய் தென்றலாக வீசும் ராச லீலைக் காலம்

இருவர்: காதல் யோகம் ஆகும்
ஆண்: ராச லீலைக் காலம் இருவர்: காதல் யோகம் ஆகும்